முதலமைச்சர் பதவி என்ன மூர் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பொம்மையா என்று கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், கமல்ஹாசன் முதாலில் எம்.எல்.ஏ ஆகட்டும் பின்னர் முதலமைச்சராகட்டும் என்று விமர்சித்துள்ளார். விரைவில் அரசியலுக்கு வருவேன் என்றும், தேவைப்பட்டால் முதலமைச்சராகவும் தயாராக இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். நகடிர் கமல்ஹாசனின் இந்த பேச்சு குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது: முதலமைச்சர் பதவி என்பது மூர் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பொம்மையா? ட்விட்டரில் 100 நாளில் முதலமைச்சராகிவிடலாம் என்று சொன்னால் மட்டும் முதலமைச்சராகிவிட முடியாது.
மக்களோடு மக்களாக இருப்பவர்களை மட்டுமே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். நடிகர் சிவாஜி கணேசன் கட்சி ஆரம்பித்தபோதிலும், அவரால் எம்.எல்.ஏ-வாக கூட தேர்வாக முடியவில்லை. கூட்டத்தை வைத்து மட்டுமே எதையும் உறுதியாக சொல்லமுடியாது. அந்த கூட்டம் அப்படியே வாக்கவே வேண்டும் என்றால் அதற்கு மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். கமல்ஹாசன் முதலில் எம்.எல்.ஏ ஆகட்டும், அதன்பின்னர் முதலமைச்சராகட்டும்.
டெங்கு காய்ச்சல் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது: டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. டெங்கு கொசுக்கள் நன்னீரில் உற்பத்தியாகிறது. எனவே, டெங்குவை ஒழிக்க மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஜெயலிதா மரணத்தில் விசாரணை கமிஷன் குறித்து பேசும்போது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது அவரை யாரும் பார்க்கவில்லை என திண்டுக்கல் சீனிவாசன் கூறியது தொடர்பான கேள்விக்கு, ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அது தொடர்பாக அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விரையில் நீதிபதி அறிவிக்கப்படுவார். விசாரணை கமிஷன் தான் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்கள் தப்பிக்க முடியாது என்று கூறினார்.