scorecardresearch

‘திமுகவுடன் கூட்டணியா..?’ ஸ்டாலின் பற்றி..?’.. ‘இங்க வேணாம்.. அங்க வாங்க..’- சொல்லிவிட்டு உடனே கிளம்பிய கமல்ஹாசன்

திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வது தொடர்பாக இப்போது பதில் சொல்ல முடியாது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

‘திமுகவுடன் கூட்டணியா..?’ ஸ்டாலின் பற்றி..?’.. ‘இங்க வேணாம்.. அங்க வாங்க..’- சொல்லிவிட்டு உடனே கிளம்பிய கமல்ஹாசன்

திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வது தொடர்பாக இப்போது பதில் சொல்ல முடியாது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது 70 ஆண்டு கால வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது.

இந்த புகைப்படக் கண்காட்சியை  மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது “கலைஞரின் மகன் ஸ்டாலின் என்ற காலத்திலிருந்து எனக்கு முதல்வர் ஸ்டாலினை தெரியும். நெருங்கிய நட்பு என்று சொல்லமுடியாது. அவருடன் இருந்த நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை நாங்கள் இருவருமே தெளிவுபடுத்தியிருந்தோம். அனைவராலும் அறிப்பட்ட தலைவரின் மகனாக இருப்பது கடினம். அதில் உள்ள சவால்களை கடந்து , முதலில் தொண்டனாக, இளைஞரணி தலைவராக , சட்டமன்ற உறுப்பினராக, பின்பு மேயாராக இப்போது முதல்வராக, அவர் படிப்படியாக உயர்ந்துள்ளார். இது அவர் பொறுமையை மட்டுமல்ல, அவரது சிறப்பான திறமையை காட்டுகிறது.

வரலாற்றை நாம் நினைவுப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஏனென்றால் வரலாற்றை இங்கே மாற்ற சிலர் துடிக்கிறார்கள். குறிப்பாக தமிழ் வரலாற்றை திருத்தி எழுத சில முயற்சிக்கிறார்கள். இதற்கு எதிராக நமது வரலாற்றை நாம் நினைவு கூற வேண்டும். எப்போதும் நல்ல செய்திகள் தபாலில்தான் வரும். அதனால்தான் அமைச்சர் சேகர் பாபு இந்த நிகழ்வை நடத்துகிறார்’ என்று கூறினார்.

“ நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுன் கூட்டணி அமையுமா என்று கேட்டால் அதற்கு இப்போது பதில் இல்லை. ஒரு படத்தை அடுத்தடுத்த காட்சிகளல்தான் நகர்த்து செல்ல வேண்டும் . உடனடியாக இறுதி காட்சிக்கு செல்லக் கூடாது. இங்கே இதை பற்றி பேச வேண்டாம்” என்று அவர் கூறினார்.  

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Kamal haasan press meet stalin birthaday event