“நான் பூ அல்ல, விதை” - மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில்

நான் பூ அல்ல, விதை. என்னை முகர்ந்து பார்க்காதீர்கள். விதைத்துப் பாருங்கள், வளர்வேன். நான் கூட்டணி வைப்பேன் என்று எப்போதும் சொன்னதில்லை.

‘கவர்ச்சியான காகிதப் பூக்கள் மலரலாம், மணக்காது’ என்ற மு.க.ஸ்டாலின் கருத்துக்குப் பதில் அளித்துள்ளார் கமல்ஹாசன்.

தி.மு.க.வின் செயல் தலைவரான மு.க.ஸ்டாலின், இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “பருவநிலை மாறும்போது ஒரு சில பூக்கள் திடீரென மலரும், பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால், காகிதப் பூக்கள் மணக்காதல்லவா…” என்று குறிப்பிட்டிருந்தார்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் அரசியலில் களமிறங்குவதைத்தான் மு.க.ஸ்டாலின் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன. இதற்குப் பதில் அளித்துள்ள கமல்ஹாசன், “நான் பூ அல்ல, விதை. என்னை முகர்ந்து பார்க்காதீர்கள். விதைத்துப் பாருங்கள், வளர்வேன். நான் கூட்டணி வைப்பேன் என்று எப்போதும் சொன்னதில்லை. அதனால், மு.க.ஸ்டாலின் என்னைப் பற்றி சொல்லியிருக்க மாட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

×Close
×Close