பிறந்த நாளன்று ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ள கமல்!

இந்த ஆண்டு எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்

இந்த ஆண்டு எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்

author-image
sreeja
புதுப்பிக்கப்பட்டது
New Update
கமல் பிறந்தநாள்

கமல் பிறந்தநாள்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கமல் பிறந்தநாள்:

Advertisment

நடிகர் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் அரசியல் கட்சியை தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கமல் ஹாசனின் பிறந்த நாள் இன்று (7.11.18) நாடு முழுவதும் உள்ள அவரின் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்து விட்டு நலத்திட்ட உதவிகள் செய்யுமாறு கமல் ஹாசன் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisment
Advertisements

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த ஆண்டு எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம். கேக் வெட்டுதல் உள்ளிட்ட ஆடம்பர செலவுகள் செய்ய வேண்டாம். அதற்குப் பதிலாக ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், ஆசிரமங்களில் உள்ளவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். ரத்த தானம் போன்ற நற்பணிகளில் ஈடுபட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

Makkal Needhi Maiam Kamal Haasan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: