Advertisment

ஞாநியின் உடல்தானத்தைப் பாராட்டிய கமல்ஹாசன்

ஞாநி செய்த உடல் தானம் போற்றுதலுக்கு உரியது. அவர் தானத்திற்கு சடங்குகள் தடையாகாமல் அனுமதித்த குடும்பத்தாரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

author-image
cauveri manickam
Jan 15, 2018 15:30 IST
kamal haasan new party

ஞாநி உடல் தானம் செய்தது போற்றுதலுக்கு உரியது’ என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

Advertisment

எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான ஞாநி, உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். பல்வேறு அரசியல் தலைவர்களும், பத்திரிகையாளர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த், நடிகரும், இயக்குநருமான ரா.பார்த்திபன் ஆகியோர் நேரில் சென்று ஞாநி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ‘ஞாநி என்னுடைய நண்பர், நான் அவருடைய ரசிகன்’ எனக் குறிப்பிட்டார் ரஜினிகாந்த்.

இந்நிலையில், கமல்ஹாசன் தன்னுடைய இரங்கல் செய்தியை ட்விட்டரில் வெளியிட்டார். “திரு ஞாநியின் மரணத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் செய்த உடல் தானம் போற்றுதலுக்கு உரியது. அவர் தானத்திற்கு சடங்குகள் தடையாகாமல் அனுமதித்த குடும்பத்தாரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

#Gnani Sankaran #Writer Gnani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment