‘புகழும் பதவியும் மட்டுமே முக்கியம் என நினைக்கும் எவ்வரசும் கவிழும்’ என கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
தீவிர அரசியலில் ஆர்வம் காட்டிவரும் கமல்ஹாசன், அவ்வப்போது ட்விட்டரில் தன்னுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். பொதுமக்களுக்கு ஆதரவான அந்த ட்வீட்டுகள், மத்திய மற்றும் மாநில அரசின் குறைகளை சுட்டிக் காட்டும் வகையில் அமைந்துள்ளன. அந்த வரிசையில், நேற்றிரவு ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்.
“உயிர்ச் சேதமானாலும் பரவாயில்லை. புகழும் பதவியும் மட்டுமே முக்கியம் என நினைக்கும் எவ்வரசும் கவிழும். பாதசாரிகளின் உயிரை மதியாத அரசு, பல்லக்கில் போவது வெகுநாள் நடக்காது. விபத்துகள் நிகழ வழிசெய்பவர், கொலைக்கு உடந்தையாவர் என தமிழக Banner“ஜி”க்கள் உணர வேண்டும்” என்று அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாலைகளில் கட் அவுட் வைப்பதற்கு எதிராகவே இந்த ட்வீட்டை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். இந்த ‘பேனர்ஜி’ என்ற வார்த்தையை, சூர்யா நடித்த ‘ஆதவன்’ படத்தில் வடிவேலு பயன்படுத்தியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
,