Advertisment

நடிகர் விஜய்யை சீண்டிய கமல்ஹாசன் : அரசியலில் போட்டியா? அவர் நல்ல படம் நடிக்கட்டும்!

நடிகர் விஜய் அரசியலில் உங்களுக்கு போட்டியா? எனக் கேட்டதற்கு, ‘அவர் ஒரு நல்ல படத்தில் நடிக்கட்டும்!’ என பதில் கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kamal Haasan Meeting at Railway Stations Cancelled

நடிகர் விஜய் அரசியலில் உங்களுக்கு போட்டியா? எனக் கேட்டதற்கு, ‘அவர் ஒரு நல்ல படத்தில் நடிக்கட்டும்!’ என பதில் கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.

Advertisment

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து உருவான அரசியல் வெற்றிடம், தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு உடனடியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை முந்துக்கொண்டு ட்விட்டர் மூலமாக அதிரடி கருத்துகளை பற்ற வைத்த நடிகர் கமல்ஹாசன், தனிக்கட்சி தொடங்கி அரசியலுக்கு வர இருப்பதை உறுதி செய்துவிட்டார்

இந்த நிலையில் தனியார் சேனல் ஒன்றுக்கு கமல்ஹாசன் அளித்த பேட்டி இது..

‘அரசியலுக்கு வருவதற்கான முயற்சியில் இருக்கிறேன். இது ஒரு முக்கியமான பயணம்! எனவே அதற்கான திட்டங்கள் குறித்து பெரியவர்களிடமும், அனுபவஸ்தர்களிடமும், எனது நண்பர்களிடமும் ஆலோசனை செய்து வருகிறேன். எனது நற்பணி இயக்க தொண்டர்களிடத்திலும் கலந்து பேசுகிறேன். இந்த ஆய்வுகள் முடிந்த பிறகு அறிவிப்பேன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் குறிப்பிடுகிறார்கள். ஒரு முதல்வராக அவரை பார்க்காமல் சாதாரண பெண்ணாக பார்த்தாலும் கூட அந்த பெண்மணியின் மரணத்தில் நிறைய ரகசியங்களும், குழப்பங்களும் இருப்பதாக தெரிகிறது. அவரது மரணம் சர்ச்சைக்குரியது. எனவே ஜெயலலிதா மரணம் குறித்து போலீசார் புலன் விசாரணை செய்ய வேண்டும்.

என்னை பின்னால் இருந்து யாரோ இயக்குவதாக சொல்வது நிஜமல்ல. என்னை யாரும் இயக்க முடியாது. நான் யாருடைய பின்னாலும் செல்ல மாட்டேன். மற்றவர்களோடு சேர்ந்து நடப்பேன். எல்லோரும் ஒன்றாக ஒரே இலக்கை நோக்கி செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஊழலை ஒழிப்பதற்காகவே அரசியலுக்கு வர விரும்புகிறேன். ஊழலை ஒழித்தால் மட்டுமே நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும். ஊழலை ஒழிக்காமல் வேறு எந்த பணிகளையும் செய்ய முடியாது. எனது கட்சி மக்களுக்கானது. மக்கள் நலனும் அவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே முக்கிய கொள்கையாக இருக்கும். சாதிய விளையாட்டுகள் இருக்காது.

அ.தி.மு.க.வை மக்கள் மறந்து பல நாட்கள் ஆகி விட்டது. எம்.ஜி.ஆரின் அண்ணாயிசம் கொள்கைகளில் இருக்கும் நல்ல விஷயங்களை நானும் எடுத்து பயன்படுத்திக் கொள்வேன். ஆனாலும் தனி கட்சி தொடங்குவதுதான் எனது நோக்கமாக இருக்கிறது. ரஜினிகாந்தை நேரில் சந்தித்து நான் அரசியலில் ஈடுபடப்போவதை தெரிவித்தேன். அவரும் எப்போது முடிவு செய்தீர்கள் என்று கேட்டார். ரொம்ப நாட்களுக்கு முன்பாகவே முடிவு செய்து விட்டதாக கூறினேன்.

விஜய் அரசியலுக்கு வந்தால் போட்டியாக இருப்பாரா? என்று கேட்கிறார்கள். எனக்கு இடையூறாக இருக்கும் பட்சத்தில் அதற்கான விமர்சனங்கள் வைக்கப்படும். வெற்றி பெற்ற பெரிய நடிகர்கள் ஒரு நல்ல படத்தில் நடிக்க வேண்டும். இந்தி நடிகர் அமீர்கான் அப்படி நடித்துக்கொண்டு இருக்கிறார். தம்பி விஜய்யும் அதுபோல் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை’. இவ்வாறு கமல்ஹாசன் பேட்டியில் தெரிவித்தார்.

Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment