"பிக்பாஸ்" சர்ச்சையால் தினமும் கமல்ஹாசனின் பெயர் செய்திகளில் அடிபடுவது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக, தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கின்றது என்று அவர் கூறியதற்கு, அதிமுக அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கமல்ஹாசனை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் பகிரங்கமாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, பல பக்கங்களில் இருந்தும் கமலுக்கு ஆதரவுகள் குவிந்தது. குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர்களால் கமல் மிரட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அதேபோல், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தச் சூழ்நிலையில், நடிகர் கமல்ஹாசன் நேற்று தனது ட்விட்டரில் கவிதை வடிவில் சில கருத்துகளை பதிவிட்டுள்ளார். அதில்,
என்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதில், "தோற்றிறந்தால் போராளி, முடிவெடுத்தால் யாம் முதல்வர்" என்று குறிப்பிட்டிருப்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. "இனி யாரும் இங்கு மன்னர் கிடையாது. முடிவெடுத்தால் நான் முதல்வர்...தோற்றால் போராளி" என்று கூறியிருப்பது அவர் அரசியலுக்கு வருகிறாரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
மேலும்,
என்ற மற்றொரு செய்தியையும் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், புரோ கபடி லீக் 5-வது சீஸன் போட்டி வருகிற 28-ம் தேதி முதல் அக்டோபர் 28-ம் தேதி வரை இந்தியாவின் 12 நகரங்களில் நடக்கிறது. இதில் களம் காணும் 12 அணிகளில் ஒன்றான ‘தமிழ் தலைவாஸ்’ அணியைப் பிரபலப்படுத்த அந்த அணியினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், 'தமிழ் தலைவாஸ்' அணிக்கு நடிகர் கமல்ஹாசனை பிராண்டு அம்பாசிடராக்கி இருக்கிறார்கள். இந்த பிரஸ் ரிலீஸ் தற்போது வெளியாகியிருக்கிறது. ‘தமிழ் தலைவாஸ்’ பிராண்டு அம்பாசிடர் ஆனதைத்தான் கமல் இவ்வாறு ட்விட்டரில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்கிறார்கள்.
இருப்பினும், கமலின் ரசிகர்கள் இதனை அரசியல் அறிவிப்பகாவே பார்க்கிறார்கள். விரைவில், நிச்சயம் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவார் என்றே சமூக தளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.