/tamil-ie/media/media_files/uploads/2017/12/a27.jpg)
Rajinikanth political entry
அரசியலுக்கு வருவதாக ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர்கள் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தனிக்கட்சி தொடங்கி சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போகிறேன் என்றும் அறிவித்துள்ளார். இதையடுத்து, ரஜினி ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஏற்கனவே அரசியலில் இறங்கியிருக்கும் நடிகர் கமல்ஹாசன் ரஜினியின் அரசியல் என்ட்ரி குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக" என்று ட்வீட் செய்திருக்கிறார்.
சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக
— Kamal Haasan (@ikamalhaasan) 31 December 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.