முட்டை ஊழல் நடந்ததாக கமல் ரசிகர்கள் குற்றச்சாட்டு… பெரம்பலூர் கலெக்டர் மறுப்பு!

அழுகிய சத்துணவு முட்டை வழங்கப்படுவதாக என்று கமல் நற்பணி இயக்கத்தின் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் முத்துக்குமார் புகார்

By: Updated: August 2, 2017, 10:02:58 AM

பெரம்பலூரில் சத்துணவு சாப்பிடு குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கியதை, தனது ரசிகர்கள் கண்டறிந்ததாக நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட கலெக்டெர் சாந்தா, முட்டை ஊழல் நடந்ததாக கூறப்படும் பெரம்பலூரில் உள்ள முத்துநகர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் போது சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்டோரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளார்.

அப்போது, சத்துணவு ஊழியர்கள் தரப்பில் கூறப்பட்டதாவது: சேதம் அடைந்த முட்டைகளை தனியாக எடுத்து வைக்கப்பட்டதாகவும். அவை குழந்தைகளுக்கு வழங்கப்படவில்லை. இதனை சிலர் புகைபடம் எடுத்து வைத்துக் கொண்டு தவறான தகவல்களை பரப்புவதாக கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது: கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முட்டை அடுக்கி வைக்கப்பட்டிருந்த டிரேயில் மழை நீர் தேங்கியது. இதனால், சில முட்டைகள் சேதம் அடைந்ததால், அit தனியாக எடுத்து வைக்கப்பட்டது. அழுகிய முட்டைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் புகாரில், உண்மையில்லை. அப்படி இருக்கையில், எதன் அடிப்படையில் சத்துணவில் அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது என்று தெரியவில்லை என்று கூறினார்.

முன்னதாக, பெரம்பலூர் மாவட்ட கமலஹாசன் ரசிகர் நற்பணி இயக்கத்தினர் கடந்த ஜூலை 24-ம் தேதி பெரம்பலூரில் உள்ள அங்கன்வாடி மையத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது, அங்கன்வாடி மையத்திலுள்ள 3 வயது, 4 வயது குழந்தைகளுக்கு அழுகிய சத்துணவு முட்டை வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.பெரம்பலூர் ஒன்றியம், நகரம், வேப்பந்தட்டை ஒன்றியம், குன்னம் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் ஆரம்ப பள்ளிகளிலும் கமல்ஹாசன் ரசிகர்கள் ஆய்வு மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆய்வின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அழுகிய சத்துணவு முட்டை வழங்கப்படுவதாக என்று கமல்ஹாசன் ரசிகர் நற்பணி இயக்கத்தின் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் முத்துக்குமார் புகார் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், பெரம்பலூரில் சத்துணவு முட்டை ஊழலை அம்பலப்படுத்தியதாக தனது நற்பணி இயக்கத்தினருக்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் மூலம் பாராட்டு தெரிவித்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Kamals fan alleged rotten egg given to student in perampalur collector denied

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X