Advertisment

சொன்னா நம்பமாட்டீங்க.... கமலின் கட்சிக்கு இவ்வளவு வாக்குகள் கிடைச்சிருக்கு!!!

மக்கள் நீதி மய்யம் கட்சி, லோக்சபா தேர்தலில், 15 லட்சத்து 62 ஆயிரத்து 316 வாக்குகள் கிடைத்துள்ளன. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 3.72 சதவீதம் ஆகும்.

author-image
kumaranbabu tk
புதுப்பிக்கப்பட்டது
New Update
makkal needhi maiam, kamalhassan, votes, third place, loksabha elections, மக்கள் நீதி மய்யம், கமல்ஹாசன், வாக்குகள், லோக்சபா தேர்தல்

makkal needhi maiam, kamalhassan, votes, third place, loksabha elections, மக்கள் நீதி மய்யம், கமல்ஹாசன், வாக்குகள், லோக்சபா தேர்தல்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, இந்த லோக்சபா தேர்தலில், 15 லட்சத்து 62 ஆயிரத்து 316 வாக்குகள் கிடைத்துள்ளன. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 3.72 சதவீதம் ஆகும்.

Advertisment

கடந்த 2018ம் ஆண்டில் தமிழகத்தில் இப்படி ஒரு அரசியல் கட்சியே இல்லை. ஆனால், நடந்து முடிந்துள்ள லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் குறிப்பிட்ட வாக்குகளை பெற்று, சந்தித்த முதல் தேர்தலிலேயே சிறப்பான என்ட்ரி கொடுத்திருக்கிறது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம். சினிமா, பிக்பாஸ் என்று பிஸியாக சுற்றிக்கொண்டிருந்த கமல்ஹாசன், திடீரென்று அரசியலில் குதித்தார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலில் பிரதான கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் களமிறங்கினார்.

தமிழகத்தில், அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளுக்கு மாற்றாக ஓர் அரசியல் கட்சி உருவாவது மிகவும் கடினம். அப்படியே கட்சி உருவானாலும் தேர்தலில் ஜொலிப்பது கடினம். இதையெல்லாம் கடந்து தேர்தலில் வெற்றிபெற்றாலும், அதைத் தக்கவைத்துக்கொள்வது மேலும் கடினம்.

மக்கள் நீதிமய்யம் கட்சி 12 தொகுதிகளில் 3ம் இடம் பிடித்துள்ளது.

வடசென்னை - ஏ.ஜி. மவுரியா 103167 வாக்குகள் ( 10.8 சதவீதம்)

மத்திய சென்னை - கமீலா நாசர் 92249 வாக்குகள் ( 11.74 சதவீதம்)

தென் சென்னை - ஆர்.ரங்கராஜன் - 135465 வாக்குகள் (12.03 சதவீதம்)

கோவை - ஆர்.மகேந்திரன் - 145104 வாக்குகள் ( 11.6 சதவீதம்)

பொள்ளாச்சி - ஆர்.மூகாம்பிகா - 59693 வாக்குகள் ( 5.52 சதவீதம்)

திருப்பூர் - வி.எஸ். சந்திரகுமார் - 64657 வாக்குகள் - (5.78 சதவீதம்)

ஸ்ரீபெரும்புதூர் - எம்.ஸ்ரீதர் - 135383 வாக்குகள் ( 9.63 சதவீதம்)

ஈரோடு - ஏ.சரவணகுமார் - 47719 வாக்குகள் - (4.47 சதவீதம்)

சேலம் - எம்.பிரபுமணிகண்டன் - 58662 வாக்குகள்- (4.67 சதவீதம்)

மதுரை - எம்.அழகர் - 85048 வாக்குகள் ( 8.37 சதவீதம்)

திருவள்ளூர் - எம்.லோகரங்கன் - 73731 வாக்குகள் (5.24 சதவீதம்)

புதுவை யூனியன் பிரதேச லோக்சபா தொகுதி - டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் - 38068 வாக்குகள் ( 4.81 சதவீதம்) பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.

Kamal Haasan Makkal Needhi Maiam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment