Advertisment

அவதூறு வழக்கு... விசாரணைக்கு வந்த கனல் கண்ணன்: இந்து முன்னணி - போலீசார் இடையே மோதல்

இந்து முன்னணியினர் மட்டும் அல்லாது பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர்களும் அந்த பகுதியில் அதிகமாக கூடியதால் ஒரு பரபரப்பு நிலவியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kanal Kannan

சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்

த.இ.தாகூர். கன்னியாகுமரி.

Advertisment

சமூக வலைத்தளங்களில் கிறிஸ்தவ மதத்தை பற்றி அவதூறு வீடியோ பதிவு செய்த இந்து முன்னணி கலை இலக்கிய பிரிவு மாநில தலைவர் மற்றும் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று (ஜூலை 10) காலை ஆஜரானார்

விசாரணைக்கு வந்த சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கணல் கண்ணன் காலை 10 மணிக்கு சைபர் கிரைம் அலுவலகத்தில் ஆஜராகியும் அவரிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் அவரை அலுவலகத்தில் உட்கார வைத்திருந்ததை பார்த்த இந்து முன்னணியினர் இதனை கண்டித்து கனல் கண்ணன் அமரவைத்திருந்த இடத்தில் கூட்டமாக தரையில் அமைதியாக அமர்ந்து இருந்தனர்.

ஆனால் பலமணி நேரம் ஆகியும் கனல் கண்ணனிம் விசாரணை நடத்த காலதாமதம் ஆனதால், அவருடன் அமர்ந்திருந்தவர்களும் மதிய உணவிற்கு நிர்வாகிகளுடன் வெளியே வந்தார். ஆனால் போலீசார் வெளியே செல்ல அனுமதிக்காததால் போலீசருக்கும் இந்து முன்னணி நிர்வாகிகளுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்புவாக்குவாதம் தள்ளு முள்ளும் ஏற்பட்டது. அந்த இடத்தில் கிரைம் பிரிவு அதிகாரி வசந்தியும் போலீசாரும் வலுக்கட்டாயமாக கனல் கண்ணனை மீண்டும் விசாரணை பகுதிக்கு அழைத்து சென்றனர்.

மேலும் மாவட்ட காவல்துறை அலுவலகம் வளாகத்தில் ஆண்,பெண் காவலர்கள் அதிகமாக குவிந்திருந்த நிலையில், இந்து முன்னணியினர் மட்டும் அல்லாது பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர்களும் அந்த பகுதியில் அதிகமாக கூடியதால் ஒரு பரபரப்பு நிலவியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment