Advertisment

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல முடியாது: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல முடியாது: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகாத கார்த்தி சிதம்பரம், அந்த சம்மனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இதனிடையே, இதனிடையே, கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விடக்கூடாது என்பதற்காக (அவரை தேடப்படும் நபராக அறிவித்து) அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸை, சிபிஐ அறிவுறுத்தலின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் குடியுரிமை அலுவலகம் பிறப்பித்துள்ளது.

கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது நண்பர்கள் நால்வர் மீது இந்த லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவு நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் வழக்குத் தொடர்ந்தார். அரசியல் காரணங்களுக்காக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாடு செல்ல வேண்டி இருப்பதால் லுக் அவுட் நோட்டீஸுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து, கார்த்தி சிதம்பரம் மற்றும் நால்வர் மீதான லுக் அவுட் நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்று பிற்பகலில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் கார்த்தி சிதம்பரம் ஆஜராகவில்லை. வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கவே லுக்-அவுட் நோட்டீஸ் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. என சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கின் விரிவான விசாரணை வருகிற வெள்ளிக்கிழமை நடைபெறும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

P Chidambaram Karti Chidambaram Inx Media Peter Mukerjea Indirani Mukerjea
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment