கருணாநிதி புகழ் வணக்கக் கூட்டங்கள்: பல்துறையினர் பங்கேற்க 5 இடங்களில் நடக்கிறது.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில், ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ என்ற தலைப்பில் அகில இந்திய தலைவர்கள் பேசுகிறார்கள்.

கலைஞரின் புகழுக்கு வணக்கம் என்ற தலைப்பில் தமிழ்நாட்டில் 5 இடங்களில் கருணாநிதிக்கு இரங்கல் கூட்டங்களை திமுக நடத்துகிறது. முதல் கூட்டம் வருகிற 17-ம் தேதி மாலை 4 மணிக்கு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறுகிறது. ‘கருத்துரிமை காத்தவர் கலைஞர்’ என்ற தலைப்பில் ஊடக வல்லுனர்கள் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.

2-வது கூட்டம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது. முத்தமிழ் வித்தகர் கலைஞர் என்ற தலைப்பில் இலக்கிய ஆளுமைகள் அதில் பேசுகிறார்கள். ஆகஸ்ட் 25-ம் தேதி மாலை 4 மணிக்கு கோவை இந்துஸ்தான் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெறும் கூட்டத்தில், ‘மறக்க முடியுமா கலைஞரை?’ என்ற தலைப்பில் கலைத்துறையினர் பேசுகிறார்கள்.

Karunanidhi Condolence Meeting, Meetings to Wish Karunanidhi, கலைஞர் புகழுக்கு வணக்கம், கருணாநிதி புகழ் வணக்க கூட்டங்கள்

‘கலைஞர் புகழுக்கு வணக்கம்’ என்கிற தலைப்பில் கூட்டம் நடைபெறும் இடங்கள்!

ஆகஸ்ட் 26-ம் தேதி மாலை 4 மணிக்கு திருநெல்வேலி சாப்டர் மேல்நிலைப்பள்ளி திடலில், ‘அரசியல் ஆளுமை கலைஞர்’ என்ற தலைப்பில் தமிழக அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு பேசுகிறார்கள். நிறைவாக ஆகஸ்ட் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில், ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ என்ற தலைப்பில் அகில இந்திய தலைவர்கள் பேசுகிறார்கள்.

திமுக தலைமைக்கழகம் இந்த தகவல்களை தெரிவித்திருக்கிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close