Advertisment

மீண்டும் உடல் நலக் குறைவு: கருணாநிதியின் மூத்த மகன் மருத்துவமனையில் அனுமதி

மு.க. முத்துவுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Karunanidhi Eldest son MK Muthu admitted Kauvery hospital Chennai Tamil News

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து கடந்த சில வருடங்களாகவே வயதுமூப்பு காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார்.

Karunanidhi Eldest son MK Muthu Hospitalised  Tamil News: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து. கருணாநிதியின் மூத்த மனைவியும் சிதம்பரம் ஜெயராமன் சகோதரியுமான பத்மாவதி இவரின் தாயார் ஆவார். தந்தையின் கலையுலக வாரிசாக திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய இவர் எம்.ஜி.ஆருக்கு எதிராக திரையுலகில் களமிறங்கினார். இவர் பிள்ளையோ பிள்ளை, போக்கிரி உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தீவிர அரசியலில் இடம் பெற விரும்பாத நிலையில், இடையில் தந்தையிடம் ஏற்பட்ட பிணக்கு காரணமாக, தனித்து வசித்து வந்தார்.

Advertisment

கடந்த 2017ம் ஆண்டு தனது வறுமையைக்கூறி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து கோரிக்கை விடுத்தார். அவருக்கு முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க நல நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் நிதியளித்து உதவினார். இது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பல காலமாக தனித்து வசித்து வரும் மு.க.முத்து, சில காலமாக முத்து எங்கே இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்தாண்டில் முத்துவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரைப் பற்றி பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது தகவல் அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த நிலையில், மு.க. முத்துவுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மு.க.முத்துவுக்கு தேவையான் சிகிச்சைகளை வழங்கி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாகவே வயதுமூப்பு காரணமாக ஓய்வில் இருந்து வரும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவுக்கு அறிவுநிதி என்ற மகனும், தேன்மொழி என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu Mk Stalin Karunanidhi M K Muthu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment