Advertisment

கருணாநிதிக்கு புகழ் வணக்கம்: கம்யூனிஸ்ட்களுக்கு தமிழிசை பதிலடி

M Karunanidhi Memorial Conference, Tirunelveli: திமுக தலைவர் கருணாநிதிக்கு புகழ் வணக்கம் கூட்டங்களை முக்கிய ஊர்களில் திமுக நடத்துகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Karunanidhi Memorial Conference, Tirunelveli, Karunanidhi Condolence Event, கருணாநிதி புகழ் வணக்க கூட்டம், திருநெல்வேலி

Karunanidhi Memorial Conference, Tirunelveli, Karunanidhi Condolence Event, கருணாநிதி புகழ் வணக்க கூட்டம், திருநெல்வேலி

M Karunanidhi Memorial Meet, Tirunelveli: கருணாநிதிக்கு திருநெல்வேலியில் சர்வ கட்சித் தலைவர்கள் கூடி புகழ் வணக்கம் செலுத்தினர். திருநாவுக்கரசர், வைகோ, தமிழிசை செளந்தரராஜன், திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்டவர்கள் பேசினர். மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி ஆகியோர் பார்வையாளர்கள் வரிசையில் இருந்தனர்.

Advertisment

திமுக தலைவர் கருணாநிதிக்கு புகழ் வணக்கம் கூட்டங்களை முக்கிய ஊர்களில் திமுக நடத்துகிறது. திருச்சி, மதுரை, கோவையை தொடர்ந்து திருநெல்வேலியில் இன்று (ஆகஸ்ட் 26) புகழ் வணக்கக் கூட்டம் நடக்கிறது.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளின் மாநில தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பு:

M Karunanidhi, Karunanidhi Memorial Conference, Tirunelveli, Karunanidhi Condolence Event, கருணாநிதி புகழ் வணக்க கூட்டம், திருநெல்வேலி M Karunanidhi Memorial Conference, Tirunelveli:: திருநெல்வேலியில் கருணாநிதி புகழ் வணக்க கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள்

M Karunanidhi Memorial Meet, Tirunelveli: திருநெல்வேலியில் கருணாநிதி புகழ் வணக்கக் கூட்டம் LIVE:

9:50 PM: தொடர்ந்த திருநாவுக்கரசர், ‘கலைஞரைப் போன்று எல்லாத் துறைகளிலும் பெயர் பெற்ற ஒரு தலைவரை இனி தமிழன்னை எப்போது பார்க்கப் போகிறாளோ? சாவே உனக்கு சாவு வராதா? என்கிற கண்ணதாசன் வரிகளை சொல்லத் தோன்றுகிறது. தமிழ் மொழி இருக்கும் வரை அண்ணன் கலைஞரின் புகழ் நீடிக்கும்.

இங்கு சில அரசியல் வாதப் பிரதிவாதங்கள் நடந்தன. அதற்குள் நான் போக விரும்பவில்லை. சகோதரர் ஸ்டாலின் எல்லோரையும் நம்பி அழைத்திருக்கிறார். அந்த நம்பிக்கையை கெடுக்க நான் விரும்பவில்லை. வேறு விதமான மன வருத்தத்துடன் இல்லாமல், கலைஞரை இழந்த மன வருத்தத்துடன் மட்டும் செல்வோம்’ என குறிப்பிட்டார் திருநாவுக்கரசர்.

9:30 PM: காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர், கலைஞருடன் தனக்கு ஏற்பட்ட சுவாரசிய அனுபவங்களை விவரித்தார்.

9:15PM: தொடர்ந்த தமிழிசை, ‘இங்கே அரசியல் பேசக்கூடாது என நினைத்தேன். ஆனால் எனக்கு முன்பு பேசியவர்கள் பேசும் நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். நீங்கள் இப்படி பேசியபிறகுதான் கலைஞர் எங்களுடன் கூட்டணி வைத்தார்.

பெரியார், அண்ணாவை சந்திக்காவிட்டால் கலைஞர் கம்யூனிஸ்டாகி இருப்பார் என இங்கே தோழர் முத்தரசன் குறிப்பிட்டார். நல்ல வேளை அவர் அண்ணா, பெரியாரை சந்தித்தார்’ என பஞ்ச் வைத்தார். தொடர்ந்து, ‘இந்த மேடையில் நான் பங்கேற்பதை பற்றி பலரும் கேட்கிறார்கள். இது வாஜ்பாயும், கலைஞரும் செய்த காரியம்’ என குறிப்பிட்டார்.

9:10 PM: தமிழிசை பேசுகையில், கலைஞருக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தியதையும், தேசிய துக்கம் அனுசரித்ததையும் குறிப்பிட்டார். தொடர்ந்து, 'மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது கருணாநிதியிடம் மருத்துவர்கள் ஒரு கேள்வி கேட்டனர். சுகர் இல்லாமல் கண்ட்ரோல் செய்திருக்கிறீர்களே.. முதுகுவலி எப்படி வந்தது என கேட்டார்கள். அதற்கு கலைஞர், ‘சுகரை நான் கண்ட்ரோல் செய்தேன். ஆனால் அரசியலில் முதுகில் குத்துபவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால் முதுகுவலி வந்துவிட்டது என்றார்.' என சுவாரசிய தகவலை குறிப்பிட்டார்.

9:00 PM: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், ‘எமர்ஜென்சி காலத்தில் சுதந்திர காற்றை சுவாசிக்கும் இடமாக தமிழகத்தை வைத்திருந்தவர் கலைஞர்!’ என குறிப்பிட்டார்.

தொடர்ந்து, ‘செயல் தலைவராக இருந்து தலைவராக பொறுப்பேற்க நீங்கள் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டுச் செல்வது பொருத்தமானது. தாமிரபரணி உங்களை வாழ்த்துகிறது’ என்றார்.

8:45 PM:மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், ‘இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு பாதிப்பு வந்துவிடுமோ, தமிழ் பண்பாடு-கலாச்சாரத்திற்கு ஆபத்து நேருமோ என்கிற சூழல் இது. தமிழகத்தில் அந்த நிலைமை ஏற்படாமல் இருக்க திமுக.வும் மார்க்சிஸ்ட் கட்சியும் இணைந்து போராடும்’ என்றார்.

அடுத்து வைகோ பேசினார்.

8:15 PM: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், ‘திராவிட இயக்கக் கொள்கைகளையும், கம்யூனிஸ கொள்கைகளையும் உள்வாங்கி செயல் படுத்தியவர் கலைஞர். கையெழுத்துப் பிரதி தொடங்கியதில் இருந்து அவரது வாழ்க்கை போராட்டம்தான்’ என குறிப்பிட்டார்.

8:00 PM: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவர் காதர் மொய்தீன், இஸ்லாமியர்களுக்கு கருணாநிதி செய்த உதவிகளை நினைவு கூர்ந்தார்.

7:45 PM: பாமக தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், ‘கலைஞர் எங்களுக்கு எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவரை தனிப்பட்ட முறையில் மிகுந்த மரியாதையுடன் நடத்தியிருக்கிறோம். ஜெயலலிதா தனது வழக்கு விசாரணைகளுக்காக மாடியில் உள்ள அலுவலகத்திற்கு ஏறி இறங்கிய போது நான் வைத்த வேண்டுகோளை ஏற்று அந்த அலுவலகத்தில் லிப்ட் வசதி வைத்துக் கொடுத்தவர் கலைஞர்’ என குறிப்பிட்டார் ஜி.கே.மணி.

7:30 PM: விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ‘கட்சிப் பொறுப்பில், ஆட்சிப் பொறுப்பில் கருணாநிதி வைத்த அத்தனை

M Karunanidhi, Karunanidhi Memorial Conference, Tirunelveli, Karunanidhi Condolence Event, கருணாநிதி புகழ் வணக்க கூட்டம், திருநெல்வேலி M Karunanidhi Memorial Conference, Tirunelveli: திருநெல்வேலியில் கருணாநிதி புகழ் வணக்க கூட்டம்

பரீட்சைகளிலும் ஸ்டாலின் ஜெயித்தார். அவர் மரணம் அடைந்த பிறகும் அண்ணா சமாதியில் இடம் பெற்றுக் கொடுக்கும் பரீட்சையை வைத்தார். அதிலும் ஸ்டாலின் ஜெயித்தார்.

சாதிய வாதிகளும், மதவாதிகளும் ஆதிக்கம் செலுத்த விரும்புகிற நேரம். வேறு எந்த மாநிலத்திலும் அது நடக்கலாம். பெரியார், அண்ணா மண்ணில் அது நடக்கக்கூடாது. இது நீங்கள் உங்கள் தந்தைக்கு அல்ல, தலைவருக்கு செய்ய வேண்டிய நன்றி’ என குறிப்பிட்டார்.

திருமாவளவனின் இந்த பேச்சின்போது பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜனும் மேடையில் இருந்தார்.

7:15 PM: த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தனது பேச்சின்போது, வயது வித்தியாசம் பாராமல் கருணாநிதி தன்னைப் போன்றவர்களை மரியாதையுடன் நடத்தியதை நினைவு கூர்ந்தார்.

7:00 PM: சென்னையில் இன்று திமுக தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்த மு.க.ஸ்டாலின், பொருளாளர் பதவிக்கு மனு தாக்கல் செய்த துரைமுருகன், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி ஆகியோர் இதில் பார்வையாளர் வரிசையில் வந்து அமர்ந்தனர்.

பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகே பெல் பள்ளி மைதானத்தில் இந்தக் கூட்டம் நடக்கிறது.

 

Mk Stalin Dmk M Karunanidhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment