Advertisment

சோனியா எழுதிய கடிதம் : கருணாநிதியிடம் வாசித்துக்காட்டிய உதவியாளர் (வீடியோ)

இந்த வீடியோ தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

author-image
kosal ram
புதுப்பிக்கப்பட்டது
New Update
DMk Chief Karunanidhi

திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கூடவே அவர் சட்டப்பேரவைக்குள் நுழைந்த 60 ஆண்டு விழாவும் கொண்டாடப்படுகிறது. தேசிய தலைவர்கள் பலரும் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருணாநிதியை பாராட்டி பேச உள்ளனர்.

Advertisment

இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் கேட்கப்பட்டது. உடல் நலகுறைவு காரணமாக அவர் கலந்து கொள்ள முடியவில்லை. அவருக்குப் பதிலாக ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். சோனியா காந்தி, கருணாநிதியை பாராட்டி கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தை திமுக தலைவர் கருணாநிதியிடம், அவரது உதவியாளர் சண்முக நாதன் வாசித்துக் காட்டினார்.

அதனை கருணாநிதி ரசித்துக் கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. வயது முதிர்ச்சி, உடல் நலக் குறைவால் கருணாநிதி ஒய்வெடுத்து வரும் நிலையில், இந்த வீடியோ தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment