Advertisment

பிரதமர் மோடி ஒரு 'சாடிஸ்ட்', ராகுலை பிரதமராக்க முன்மொழிகிறேன் - மு.க.ஸ்டாலின் அதிரடி

Karunanidhi Statue Inauguration : நாட்டுக்கு நல்லாட்சி அளிக்க, ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிகிறேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பிரதமர் மோடி ஒரு 'Sadist', ராகுலை பிரதமராக்க முன்மொழிகிறேன் - மு.க.ஸ்டாலின் அதிரடி

பிரதமர் மோடி ஒரு 'Sadist', ராகுலை பிரதமராக்க முன்மொழிகிறேன் - மு.க.ஸ்டாலின் அதிரடி

Karunanidhi Satue Inauguration Updates: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அண்ணா அறிவாலயத்தில் 9 அடி உயரத்தில் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. பளிங்கு கற்களால் பீடம் அமைத்து அதன் மீது சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா அறிவாலயத்தில் இருந்த அண்ணா சிலையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு டி.ராஜா, முத்தரசன், திருமாவளவன், கி.வீரமணி, வைகோ, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். நடிகர்கள் பிரபு, வடிவேலு, விவேக், நாசர் ஆகியோரும் வருகை தந்துள்ளனர் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். பின்பு, கருணாநிதி மற்றும் அறிஞர் அண்ணாவின் சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தார். சிலை திறக்கப்பட்ட பின்னர், ராகுல் காந்தி தனது செல்போனில் கருணாநிதியின் சிலையை படம் பிடித்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து, மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதியில் சிலைக்கு சோனியா, ராகுல் அஞ்சலி செலுத்தினர். ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் தொடங்கியது. அப்போது, 'சூரியன் மறைவதில்லை' புத்தகத்தை சோனியா வெளியிட ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசுகையில், "பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவாலாக இருக்கிறார். மத்தியில் ஒரு மாற்றம் கொண்டுவருவோம். கருணாநிதியை கவுரவிக்கும் எண்ணம் தற்போதைய தமிழக அரசுக்கு இல்லை. தேசிய அளவிலும் ராகுலும், மாநிலத்தில் ஸ்டாலினும் மாற்றத்தைக் கொண்டு வருவார்கள்" என்றார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட எங்கள் தமிழக மக்களுக்கு ஒரு ஆறுதல் வார்த்தைக் கூட பிரதமர் மோடி தெரிவிக்கவில்லை. அவர் ஒரு சேடிஸ்ட் பிரதமர். சேடிஸ்ட் மனப்பான்மை கொண்ட பிரதமர். நாட்டுக்கு நல்லாட்சி அளிக்க, ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிகிறேன். ராகுல் காந்தியே வருக... நாட்டிற்கு நல்லாட்சி தருக" என்று ஆவேசமாக பேசி முடித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

Advertisment

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

கருணாநிதி சிலை திறப்பு விழா Updates,

07:35 PM - காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா காந்தி பேசும் போது, "கருணாநிதியின் சிலை திறந்து வைத்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன். கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட போராடிய போராளி கருணாநிதி.  தமிழக அரசியலை 60 ஆண்டுகாலம் ஆட்டிப்படைத்தவர். 13 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியே காணாதவர் அவர்.  தற்போதைய அரசியல் போராட்டத்தில் திமுக - காங்கிரஸ் இணைந்து செயல்படுவதையே விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்,

07:15 PM - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "நான் இன்று மிகுந்த மகிழ்ச்சியில் பூரித்து போயிருக்கிறேன். திமுக அரசியல் வரலாற்றில் முக்கியமான நாள் மட்டுமல்ல, என்னுடைய வாழ்விலும் மறக்க முடியாத நாள். தமிழர்களின் வாழ்விலும், வளர்ச்சியிலும் இன்று முக்கியமான, மறக்க முடியாத நாள். பரம்பரை மன்னர் என்ற மமதையுடன் மோடி ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறார். தன்னையே ரிசர்வ் வங்கி என்றும், தன்னை வருமான வரித்துறை என்றும், தன்னையே உச்ச நீதிமன்றமாகவும் எண்ணிக் கொண்டிருக்கிறார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட எங்கள் தமிழக மக்களுக்கு ஒரு ஆறுதல் வார்த்தைக் கூட பிரதமர் மோடி தெரிவிக்கவில்லை. அவர் ஒரு சேடிஸ்ட் பிரதமர். சேடிஸ்ட் மனப்பான்மை கொண்ட பிரதமர். நாட்டுக்கு நல்லாட்சி அளிக்க, ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிகிறேன். ராகுல் காந்தியே வருக... நாட்டிற்கு நல்லாட்சி தருக" என்று ஆவேசமாக பேசி முடித்தார்.

06:50 PM - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், "நான் முதன் முதலாக கலைஞர் கருணாநிதி வீட்டிற்கு செல்லும் முன்பு, 'பிரம்மாண்டமான வீடாக இருக்கும், பல உயர்ந்த பொருட்கள் இருக்கும்' என்ற கற்பனையில் சென்றேன். ஆனால், அங்கு சென்ற போது தான் எளிமையை உணர்ந்தேன். கருணாநிதி சாதாரண அரசியல்வாதி அல்ல; அவர் தமிழக மக்களின் குரலாக ஒலித்தார். தமிழக மக்களின் மகிழ்ச்சியையும், வலிமையையும் தன்னுடையதாக கருதியவர் கருணாநிதி. நாட்டின் கோடான கோடி மக்களின் எண்ணங்களை மதிக்காமல் செயல்படுகிறது மத்திய அரசு" என்று தெரிவித்தார்.

06:40 PM - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், "தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் பிரச்னையை எழுப்புகிறது பாஜக அரசு. பணமதிப்பு நீக்கம் பொதுமக்களுக்கு பலன் தரவில்லை. ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தவறான தகவலை தந்து சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளது. தமிழக அரசை ரிமோட் கண்ட்ரோல் மூலம் பாஜக அரசு இயக்கி வருகிறது. சிபிஐ, ஆர்பிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை மத்திய அரசு அழித்துவிட்டது" என்றார்.

06:30 PM - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசுகையில், "பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவாலாக இருக்கிறார். மத்தியில் ஒரு மாற்றம் கொண்டுவருவோம். கருணாநிதியை கவுரவிக்கும் எண்ணம் தற்போதைய தமிழக அரசுக்கு இல்லை. தேசிய அளவிலும் ராகுலும், மாநிலத்தில் ஸ்டாலினும் மாற்றத்தைக் கொண்டு வருவார்கள்" என்றார்.

06:15 PM - திமுக பொருளாளர் துரைமுருகன் பேசுகையில், "எதிரிகள் வகுக்கும் திட்டங்களை தகர்க்கும் தன்னிகரில்லா தலைவர் ஸ்டாலின். சோனியா காந்தியிடம் ஒரு பிள்ளையாக மாறியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். அகில இந்திய அரசியலில் இன்னொரு 50 ஆண்டுகளுக்கு ஜொலிக்க போகிறார். ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வர தகுதிப் படைத்தவர். தேசியத் தலைவர்கள் சென்னை வந்து சென்றால் புதிய பதவிகள் அவர்களைத் தேடி வந்து சேரும் " என்றார்.

06:05 PMஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் லைவ்

06:00 PM - ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் தொடங்கியது. அப்போது, 'சூரியன் மறைவதில்லை' புத்தகத்தை சோனியா வெளியிட ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

05:50 PM - மெரீனாவில் அஞ்சலி செலுத்திய பிறகு, சோனியாவும், ராகுல் உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொள்ள சென்றிருக்கின்றனர்.

05:30 PM - சிலை திறக்கப்பட்ட பின்னர், ராகுல் காந்தி தனது செல்போனில் கருணாநிதியின் சிலையை படம் பிடித்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து, மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதியில் சிலைக்கு சோனியா, ராகுல் அஞ்சலி செலுத்தினர்.

05:18 PM - விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். பின்பு, கருணாநிதி மற்றும் அறிஞர் அண்ணாவின் சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தார்.

05:15 PM - காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா காந்தியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அண்ணா அறிவாலயம் வந்தனர்.

05:00 PM - கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அண்ணா அறிவாலயம் வந்தடைந்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

04:45 PM - அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு டி.ராஜா, முத்தரசன், திருமாவளவன், கி.வீரமணி, வைகோ, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். நடிகர்கள் பிரபு, வடிவேலு, விவேக், நாசர் ஆகியோரும் வருகை தந்துள்ளனர்.

publive-image

04:35 PM - வருவாரா, மாட்டாரா என்று இழுபறி நீடித்த நிலையில், கருணாநிதி சிலைத் திறப்பு விழாவிற்கு ரஜினிகாந்த் வருகை தந்துள்ளார்.

publive-image

04:30 PM - வரவேற்புக்கு பின்னர், சோனியாவும், ராகுலும் கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு கிளம்பிச் சென்றனர்.

04:15 PM - சென்னை விமான நிலையம் வந்தடைந்த காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா காந்தியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் திமுக சார்பில் கனிமொழி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

மேலும் படிக்க - கருணாநிதி சிலை திறப்பு விழா: 5 தொலைக்காட்சிகளின் போலி ஐடி கார்டுடன் வலம் வந்த மர்ம நபர் கைது

Dmk M Karunanidhi Sonia Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment