கலைஞர் கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாளின் 90ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் புரோகிதர்கள் வந்தனர்.
தொடர்ந்து, வெள்ளித் தட்டில் ஆரத்தி எடுக்கப்பட்டு, அது முற்றத்தில் கொட்டப்படும் காணொலிகள் வெளியாகின. இது நெட்டிசன்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.
இந்த வீடியோவை பார்த்து, கலைஞர் மதவாதிகளுக்கு மட்டும்தான் எதிரி; எந்த மதத்துக்கும் எதிரி அல்ல என்று திமுகவினரும், தி.க. தலைவர் வீரமணி, தர்மபுரி எம்.பி. செந்தில் எங்கே என வலதுசாரி ஆதரவாளர்களும் இணையத்தை அல்லோலப்படுத்திவருகின்றனர்.
தயாளு அம்மாளின் பிறந்தநாளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரது அண்ணன் மு.க. அழகிரி, அவரது மகன்கள் என ஒட்டுமொத்த குடும்பமும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“