scorecardresearch

கொந்தளிக்கும் அரசியல் கட்சிகள்.. தமிழக மக்களை பற்றி அப்படி என்ன பேசினார் கிரண் பேடி?

கிரண் பேடி மன்னிப்பு கேட்க வேண்டும்.

kiran bedi twitter post
kiran bedi twitter post

கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கிரண்பேடி இந்த கருத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற முழுக்கங்களும் எதிரொலித்துள்ளன.

கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதிலும் குறிப்பாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் தண்ணீர் பஞ்சத்தின் உட்சபட்சம் நெஷனல் மீடியாக்களையும் திரும்பி பார்க்க வைத்தது.

இந்நிலையில், பருவமழை தொடங்கி சென்னையில் தொடர்ந்து 2நாட்களுக்கு மழை பெய்ததால் சென்னையில் தண்ணீர் பஞ்சம் சற்று அறவே குறைந்துள்ளது. தண்ணீர் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினிநோயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆளுநர் கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிட்ட கருத்து.

“ இந்தியாவின் ஆறாவது மிகப்பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. இதே நகரம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் வெள்ளத்தில் முழ்கியது. மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவற்றால் வறட்சி ஏற்பட்டுள்ளது. அத்துடன் மக்களின் சுயநல எண்ணமும், கோழைத்தனமான அணுகு முறையும்கூட காரணமாக உள்ளது” என கூறினார்.

கிரண்பேடியின் இந்த கருத்து தமிழக அரசியல் தலைவர்களை பெரும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தமிழக மக்கள் கோழைகள் என்று கூறுவது போல் கிரண்பேடியின் கருத்து அமைந்திருப்பாதகவும் பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கியுள்ளன.

திமுக வெளிநடப்பு:

இன்று சட்டசபை கூட்டத்தொடர் காலையில் தொடங்கியது. அப்போது எதிர்க்கட்ட்சி தலைவரும் திமுக தலைவருமான முக. ஸ்டாலின் தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது தமிழகத்தில் ஊழல் நடக்கிறது என்றும், மோசமான அரசு நடப்பதாகவும் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி டுவீட் பதிவிட்டுள்ளார்.இது தமிழகத்தை ஸ்டாலின் அவமானப்படுத்தும்படி உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

இதனையடுத்து ஆளுநர் குறித்து சட்டசபையில் பேசக்கூடாது என்றும், நீதிமன்றத்தில் வழக்கில் இருப்பதை குறித்துப் பேசக் கூடாது என்றும் கூறிய சபாநாயகர் அவர்கள் இருவர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.இதற்கு எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட அவர் தலைமையிலான திமுக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து கிரண்பேடியின் டுவிட்டர் பதிவை கண்டித்தும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மேலும், கிரண்பேடியின் இந்த பதிவை புதுச்சேரி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். புதுச்சேரி உட்பட பகுதிகளில் போராட்டங்களும் நடைப்பெற்று வருகின்றன. கிரண்பேடி தனது பதிவுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

அதிமுக கண்டனம்:

கிரண்பேடியின் கருத்திற்கு அதிமுக சார்ப்பில் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் வளர்மதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தனது பதவிக்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில் கருத்து பதிவு செய்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் தருவதாக” தெரிவித்துள்ளார்.

கிரண்பேடியின் இந்த கருத்திற்கு தமிழக அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் வைகோ, டிடிவி தினகரன், திருநாவுக்கரசர் ஆகியோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Kiran bedi twitter post making big sensational issue

Best of Express