கோவையில் கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டில் திருச்சி, சென்னை, நெல்லை, கோவை உள்ளிட்ட 15 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், திருச்சி பீமநகர் ராஜா காலனி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சேக்தாவூத் என்பவரது வீட்டில் சோதனையை இன்று (15.02.2023) காலை அதிரடியாக தேசிய புலனாய் முகமை அதிகாரிகள் துவக்கினர்.

இவர் சென்னையிலுள்ள மென்பொருள் நிறுவனத்தில் வீட்டிலிருந்து பணிபுரிகிறார். தேசிய புலனாய்வு முகமை ஆய்வாளர் ஹரிஒம் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேக்தாவூத்க்கு கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக இவரிடம் தற்பொழுது விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் (Fundamentalist) மதமாற்றம் தொடர்பான விவகாரத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சேக்தாவூத் கடந்த ஆறு மாத காலமாகத்தான் இந்த வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார் என்பதும், கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த அக்டோபர் 23″ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியதில், ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்தி : க.சண்முகவடிவேல்