Advertisment

கோவை டி.ஐ.ஜி தற்கொலை: 2 பேரிடம் விசாரணை

டி.ஐ.ஜி தற்கொலை விவகாரத்தில் 8 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பிய காவல்துறையினர், இன்று இரண்டு நபர்களிடம் விசாரணை மேற்கொள்கின்றனர்.

author-image
Vasuki Jayasree
New Update
2 பேரிடம் விசாரணை

2 பேரிடம் விசாரணை

டி.ஐ.ஜி தற்கொலை விவகாரத்தில் 8 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பிய காவல்துறையினர்,  இன்று இரண்டு நபர்களிடம் விசாரணை மேற்கொள்கின்றனர்.

Advertisment

கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் கடந்த 7"தேதி முகாம அலுவலகத்தில் கை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்  டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை தொடர்பாக கோவை ராமநாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள், அவரது வீட்டில் இருந்தவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

தொடர்ந்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே டி.ஐ.ஜி. தற்கொலை செய்து கொண்டது இது தொடர்பாக  சிலர் சமூக ஊடகங்களில் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில்  டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறாக பதிவிட்டவர்கள், சமூக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தவர்கள் என 8 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

publive-image

அதில் இவர்கள் இன்று  கோவை  ராமநாதபுரம் காவல் நிலைய போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். அப்படி அவர்கள் ஆஜராகும்பட்சத்தில் அவர்களிடம் டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் எந்தவித ஆதாரத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது.

யார் அதனை தெரிவித்தது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் இன்று இரண்டு நபர்களிடம் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் வாராகி மற்றும் ராஜவேல் நாகராஜ் என்ற இரண்டு நபர்கள் மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.

பி.ரஹ்மான்.

கோவை மாவட்டம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment