இன்னொருவர் கையை வெட்டி மனைவிக்கு பரிசளித்த ‘சிறைப் பறவை’: கிருஷ்ணகிரி பயங்கரம்

Krishnagiri horror : மனைவிக்கு அதையே பரிசாகக் கொடுத்தேன்.அடுத்து யாரோடு தொடர்பு வைத்தாலும், இது போலவே கைகளை பரிசாகக் கொடுப்பேன்

By: Updated: June 10, 2020, 04:14:26 PM

கள்ளக்காதலனைக் கொன்று அவன் கையைத் துண்டித்து, அதையே மனைவிக்கு பரிசாகக் கொடுத்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம், கிருஷ்ணகிரியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கிருஷ்ணகிரி மாவட்டம், பாரதியார் நகர் 4வது தெருவில் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த ஒரு ஆணின் வலது கையும் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சுடுகாட்டில் வலது கை இல்லாமல் கிடந்த சடலத்தை கண்டெடுத்த சம்பவம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை போலீசார் மட்டுமல்லாது அப்பகுதி மக்களையும் பெரும்அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

போலீசார் விசாரணை : இதற்கடுத்து நடைபெற்ற அடுத்தடுத்த விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்ரமணிதான் இப்படி கைவேறு உடல் வேறாக துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர் என்று உறுதியானது. மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த பாலசுப்ரமணி, கொலை செய்யப்பட்டு கிடந்ததால், சம்பவம் குறித்து அவர் மனைவியிடம் இருந்தே காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். அவர் மனைவி கொடுத்த தகவலின் பேரில், பாலசுப்ரமணிக்கு இன்னொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்தது தெரிந்தது.

கள்ளக்காதல் : பாலசுப்பிரமணியின் கள்ளக்காதலி யார் என்ற தகவலைப் பெற்ற காவல்துறை, கள்ளக்காதலியின் கணவனான ராணிப் பேட்டையை சேர்ந்த தமிழரசனைப் பிடித்து விசாரணை செய்தது. பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் தமிழரசன், அடிக்கடி சிறைக்குப் போனதைப் பயன்படுத்தி அவர் மனைவியுடன் பாலசுப்பிரமணி தொடர்பில் இருந்ததால் பாலசுப்பிரமணியை திட்டமிட்டுக் கொலை செய்ததாக, தமிழரசன், ஒப்புக் கொண்டார்.

ஒப்புதல் வாக்குமூலம் : தமிழரசன் அளித்த வாக்குமூலத்தில், கள்ளக்காதலைக் கைவிடச் சொல்லியும் அதை தன்னுடைய மனைவி கேட்கவில்லை என கூறியுள்ளார். மேலும் தான் சிறையில் இருந்த போது தனது மனைவி கர்ப்பமானது தமக்கு ஆத்திரமூட்டியதாக கூறினார். இதனால், பாலசுப்பிரமணியை கொலை செய்ய தமிழரசன் கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிவித்தார். கடந்த 3ம்தேதி, பாலசுப்பிரமணியை தேடிப்பிடித்து மது குடிக்க அழைத்து சென்றதாகவும், போதையில் இருந்த நேரம் பார்த்து அவரது வலது கையை துண்டித்து விட்டு கொலை செய்தேன் என கூறினார்.
கையை ஒரு பையில் வைத்துக் கொண்டு பாரதியார் நகரில் வீட்டில் இருந்த தனது மனைவிக்கு அதையே பரிசாகக் கொடுத்தேன்.அடுத்து யாரோடு தொடர்பு வைத்தாலும், இது போலவே கைகளை பரிசாகக் கொடுப்பேன் என்று சொல்லி விட்டு தலைமறைவாகி விட்டேன்” என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Krishnagiri liaision affair husband bare hand dead body husband gift

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X