குரங்கனி மலைத் தீ சோகம், தமிழ்நாட்டை உலுக்கியிருக்கிறது. மலையேற்றப் பயிற்சிக்கு சென்றவர்கள், காட்டுத் தீயில் சிக்கி பலர் கருகிய நிலையில் மீட்கப்பட்டனர்.
குரங்கணி, தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் போடி அருகிலுள்ள ஒரு மலைப் பகுதி கிராமம். இங்கிருந்து 15 கி.மீ தொலைவில் ‘டாப் ஸ்டேஷன்’ என்கிற இடம் இருக்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலம் இது!
குரங்கணி வரை சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் போகலாம். அங்கிருந்து கடினமான மலைப் பாதையில் நடந்தே டாப் ஸ்டேஷன் செல்ல வேண்டும். சுற்றுலாவுக்கு மட்டுமல்லாமல், மலையேற்றப் பயிற்சிக்காகவும் ஆர்வமுள்ளவர்கள் இங்கு வருவார்கள்.
குரங்கணி மலைப் பகுதிக்கு சென்னையைச் சேர்ந்த ஒரு குழுவினர் நேற்று முன்தினம் வந்தனர். மொத்தம் 36 பேற் கொண்ட இந்தக் குழுவில் மெஜாரிட்டியாக ஐ.டி. நிறுவன இளைஞிகள் இருந்தனர். அதேபோல திருப்பூர், ஈரோடு பகுதியை சேர்ந்த 12 பேரும் இன்னொரு குழுவாக சென்றனர்.
குரங்கணி, டாப் ஸ்டேஷன் பகுதியில் மலையேற்றத்தை முடித்துவிட்டு நேற்று (மார்ச் 11) மாலையில் இவர்கள் கீழே இறங்கும்போது திடீரென காட்டுத் தீ சுற்றி வளைத்தது. இவர்களில் பலர் பதற்றமாகி பள்ளத் தாக்குகளில் உருண்டு விழுந்தனர். பலர் தீயில் சிக்கினர். அக்கம்பக்கத்து தேயிலை தோட்ட ஊழியர்கள் இது குறித்து வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
Visuals of forest-fire in Kurangani, Theni. #TamilNadu pic.twitter.com/KwkxgfFMfc
— ANI (@ANI) March 11, 2018
வன அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தினர், போலீஸார் சமப்வ இடத்திற்கு சென்று மீட்புப் பணியில் இறங்கினர். மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவுப்படி கோவை, சூலூரில் இருந்து விமானப் படை ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிக்கு அனுப்பப் பட்டன. ஆனால் இரவில் எதிர்பார்த்தபடி ஹெலிகாப்டர் மூலமாக மீட்புப் பணியில் இறங்க முடியவில்லை.
Rescue measures. #TheniForestFire pic.twitter.com/YdTZF3EpfQ
— O Panneerselvam (@OfficeOfOPS) March 11, 2018
குரங்கணி பகுதியில் 2-வது நாளாக இன்றும் மீட்புப் பணிகள் நடக்கின்றன. அதன் LIVE UPDATES இங்கே..
பகல் 02.00 : குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணி நிறைவு பெற்றுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால் அறிவித்துள்ளார். மேலும், காட்டுத்தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
பகல் 01.50 : கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், "எதிர்காலத்தில் ஒரு பகுதியை தீக்கிரையாகி விட்டோம். நிவாரணத் தொகை கொடுப்பதால் பயனில்லை, அவ்வளவு பணம் என்னிடமும் இல்லை. வருங்காலத்தில் மலையேற்றத்தில் முழு பாதுகாப்பு வேண்டும். வானிலை மைய அறிக்கைகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும். காவிரி பிரச்சனை தீர்க்க முடியாத சிக்கலாக மாற்றியிருகக் கூடாது" என்றார்.
பகல் 01.00 : குரங்கணி காட்டுத்தீ விபத்து எதிரொலி: கேரளாவில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மலையேறுவதற்கு தடை. வனப்பகுதிகளில் சுற்றுலா செல்லவும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக கேரள தலைமை செயலாளர் அறிவித்துள்ளார்.
பகல் 12.30 : மீட்புப் பணியில் உள்ள அதிகாரிகள் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் 1.விபின்,கோவை. 2.அகிலா, சென்னை. 3.ஹேமலதா, சென்னை. 4.புனிதா, சென்னை. 5.சுபா, சென்னை. 6.அருண், சென்னை. 7.திவ்யா, ஈரோடு. 8.விவேக், ஈரோடு, ஆகிய 8 பேர் இறந்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். மரணம் அடைந்த மற்றொருவரை அடையாளம் காண முயற்சி நடக்கிறது.
பகல் 12.00 : மீட்புப் பணி முடிந்தது. தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட விமானப் படை ஹெலிகாப்டர்கள் கிளம்பின. சென்னையை சேர்ந்த 6 பேர் உள்பட மொத்தம் 9 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது.
பகல் 11.00 : வனத்துறையின் உரிய அனுமதி இல்லாமல் இந்தக் குழுவினர் மலையேற்றப் பயிற்சிக்கு சென்றதாக தெரிய வருகிறது. அது குறித்து விசாரிக்கப்படுவதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் ஐஏஎஸ் தெரிவித்தார்.
தேனி அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் போடி மலை அடிவாரத்தில் தற்காலிக ஹெலிபேட் அமைப்பு.
மருந்து மற்றும் மருத்துவ உபகாரணங்களுடன் மருத்துவ குழு முகாம்.#TheniForestFire
— Dr C VijayaBaskar (@Dr_Vijayabaskar) March 12, 2018
காலை 10.00 : விபத்தில் சிக்கி காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலை 9.50 : குரங்கணி விபத்தில் 10 பேர் எந்த காயமும் இன்றி மீட்கப்பட்டிருப்பதாக தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.
காலை 9.45 : குரங்கணி தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி பலியாகி இருப்பதாக தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி அதிகாரபூர்வமாக காலை 9.45 மணிக்கு அறிவித்தார். பலியானவர்களில் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது.
காலை 9.30 : கமல்ஹாசன் தனது ட்விட்டர் செய்தியில், ‘குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்’ என கூறியிருக்கிறார்.
காலை 7.15 : தீயில் மொத்தம் 36 பேர் சிக்கியதாகவும் அதில் 25 பேர் மீட்கப்பட்டுவிட்டதாகவும், 11 பேர் மட்டுமே இன்று மீட்கப்பட இருப்பதாகவும் இன்று காலையில் அதிகாரிகள் கூறினர். சிலர் 70 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் தீக்காயம் வரை அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். உயிர் பலி குறித்து அதிகாரபூர்வ தகவல் இதுவரை இல்லை.
Rescue measures. #TheniForestFire pic.twitter.com/cQ6qqqgl1p
— O Panneerselvam (@OfficeOfOPS) March 11, 2018
காலை 7.10 : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் சொந்த ஊரில் முகாமிட்டிருந்தனர். எனவே அவர்கள் சம்பவ இடத்திற்கு துரிதமாக சென்று மீட்புப் பணிகளை கவனித்தனர். மாவட்ட அதிகாரிகள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரும் உடனடியாக தயார் நிலைக்கு வந்தனர்.
காலை 7.00 : தீ விபத்து குறித்து கேள்விப்பட்டதும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அலுவலகத்தில் இருந்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தொடர்பு கொண்டு உதவி கேட்டனர். இதனாலேயே ராணுவ ஹெலிகாப்டர்களும், கமாண்டோக்களும் உடனே அங்கு செல்ல முடிந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.