Advertisment

கராத்தே தியாகராஜனுக்கு நடிகை குஷ்பூ பதிலடி : ‘தேர்தலில் சீட் வாங்குவதில் போட்டிக்கு வந்துவிடுவேன் என நினைக்கிறாரா?’

கராத்தே தியாகராஜனுக்கு நடிகை குஷ்பூ பதிலடி கொடுத்தார். ‘தேர்தலில் சீட் வாங்குவதில் போட்டிக்கு வந்துவிடுவேன் என நினைக்கிறாரா?’ என கேள்வி எழுப்பினார் அவர்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
பீனிக்ஸாக எழுவார் கருணாநிதி: குஷ்பூ உருக்கம்

கராத்தே தியாகராஜனுக்கு நடிகை குஷ்பூ பதிலடி கொடுத்தார். ‘தேர்தலில் சீட் வாங்குவதில் போட்டிக்கு வந்துவிடுவேன் என நினைக்கிறாரா?’ என கேள்வி எழுப்பினார் அவர்.

Advertisment

கராத்தே தியாகராஜன், தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கிறார். மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் இவர். தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க நேற்று சென்னையில் கட்சியின் தலைமையகமாக சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார் அவர்.

கட்சியின் அமைப்பு ரீதியான தேர்தல் நடைபெற்று வருவதால், தேர்தல் அதிகாரிகள் அங்கு இருந்தனர். அவர்களிடம் சென்ற கராத்தே தியாகராஜன், விதிமுறைகளை மீறி நடிகை குஷ்பூவை பொதுக்குழு உறுப்பினர் ஆக்கியிருப்பதாக கூறி வாக்குவாதம் செய்தார். சமீப காலமாகவே தமிழக காங்கிரஸில் ஓரங்கட்டப்படுவதாக கூறப்படும் குஷ்பூவை சுற்றிக் கிளம்பிய இந்த திடீர் சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியது.

குஷ்பூ, தற்போது கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளராக இருக்கிறார். கட்சியின் எவ்வளவு பெரிய நியமனப் பதவியில் இருந்தாலும், பொதுக்குழு உறுப்பினர் ஆவது முக்கியம். எனவே முக்கிய தலைவர்கள் அனைவருமே பொதுக்குழு உறுப்பினர் ஆகி வருகிறார்கள்.

பொதுக்குழு உறுப்பினர் ஆகவேண்டும் என்றால், 5 ரூபாய் செலுத்தி காங்கிரஸில் அடிப்படை உறுப்பினர் பதவியை புதுப்பிக்க வேண்டும். அதன்பிறகு 100 ரூபாய்க்கு விண்ணப்ப படிவம் வாங்கி, பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும். பெரும்பாலும் முக்கியத் தலைவர்களை அவரவர் சொந்த ஏரியாவில் இருந்து இந்த முறையில்தான் போட்டியின்றி தேர்வு செய்து வருகிறார்கள்.

நடிகை குஷ்பூ, சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். எனவே இவர் தென் சென்னை மாவட்டத்தில் இருந்து பொதுக்குழு உறுப்பினர் ஆக முடிவு செய்தார். ஆனால் முறைப்படி 5 ரூபாய் செலுத்தி உறுப்பினர் படிவத்தை குஷ்பூ புதுப்பிக்கவில்லை என தெரிகிறது. தவிர, 100 ரூபாய் செலுத்தியும் பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு அவர் விண்ணப்பிக்க வில்லை.

இந்த நடைமுறைகளை செய்யாமல், அவரை பொதுக்குழு உறுப்பினர் ஆக்கியத்தைத்தான் கராத்தே தியாகராஜன் கண்டித்து வாக்குவாதம் செய்தார். பிறகு செய்தியாளர்களிடமும் இதே கருத்தை கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.

இது குறித்து குஷ்பூவை செய்தியாளர்கள் தொடர்புகொண்டு கேட்டபோது, ‘கராத்தே தியாகராஜனுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. அவரை கட்சியில் அவ்வளவு முக்கியமான நபராகவும் நான் நினைக்கவில்லை. கட்சியில் நான் பதில் சொல்ல வேண்டியது, அகில இந்தியத் தலைவர் சோனியாவுக்கும் துணைத் தலைவர் ராகுலுக்கும் மட்டும்தான்.

என்னைப் பொறுத்தவரை, பணம் மற்றும் புகழை பார்த்துவிட்டுத்தான் நான் அரசியலுக்கு வந்தேன். எனவே அரசியலில் எந்த ஆதாயத்தையும் எதிர்பார்க்கவில்லை. நான் கட்சியை நம்பியும் இல்லை. அதேபோல நூறாண்டு கடந்த காங்கிரஸ், குஷ்பூவை நம்பியும் இல்லை.

கராத்தே தியாகராஜனிடம் எனது தரப்பில் இருந்து பேசியது, அதற்கு அவர் என்ன பதில் சொன்னார் என்பதெல்லாம் அவரது மனசாட்சிக்கு தெரியும். நானும் தென் சென்னை மாவட்டத்தில் இருப்பதால் தேர்தலில் சீட் கேட்பதில் நான் போட்டியாக இருப்பேன் என அவர் நினைக்கலாம். என்னைப் பார்த்து அவருக்கு பயம் இருக்கலாம். நான் ஈவிகேஎஸ் தலைவராக இருக்கும்போதே கட்சியில் உறுப்பினர் ஆகிவிட்டேன்.

கராத்தே தியாகராஜனின் புகாரை நான் பெரிதாக எடுக்கவில்லை. எனது ஒவ்வொரு நிமிடமும் மிக முக்கியம். அதை எப்படி செலவு செய்யவேண்டும் என்பது எனக்குத் தெரியும். எனவே இது தொடர்பாக மேலிடத்தில் புகார் செய்யும் திட்டம் என்னிடம் இல்லை. ஆனால் கராத்தே தியாகராஜன் இதன் மூலமாக கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த நினைக்கிறார். வேறு யார் மூலமாவது இது டெல்லி தலைமையை எட்டும். இதை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள்’ என்றார் குஷ்பூ.

இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், ‘நான் மாநிலத் தலைவராக இருந்தபோதே குஷ்பூ கட்சியின் உறுப்பினர் ஆகிவிட்டார்’ என குஷ்பூவுக்கு ஆதரவாக பதில் கூறினார்.

குஷ்பூ, உறுப்பினர் ஆகவில்லை என்பது கராத்தே தியாகராஜனின் புகார் அல்ல, ‘5 ரூபாய் செலுத்தி ஏன் உறுப்பினர் படிவத்தை புதுப்பிக்க வில்லை? 100 ரூபாய் செலுத்தி ஏன் பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க வில்லை? இதற்கே நேரம் இல்லாதவர் எப்படி கட்சிப் பணியில் தன்னை ஈடுபடுத்துவார்?’

கராத்தே தியாகராஜனின் இந்தக் கேள்விகளுக்கு யாரிடமும் பதில் இல்லை . ஆனால் இந்த மோதல், மறுபடியும் குஷ்பூவை ஆக்டிவ் அரசியலுக்கு கொண்டு வரும் என்கிறார்கள், குஷ்பூ தரப்பில்!

நடிகை குஷ்பூ, தமிழ்நாடு, காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர், தமிழக காங்கிரஸ் கமிட்டி, கராத்தே தியாகராஜன், குஷ்பூ சுந்தர், கராத்தே தியாகராஜனுக்கு குஷ்பூ பதிலடி,

கராத்தே தியாகராஜனுக்கு நடிகை குஷ்பூ பதிலடி கொடுத்தார். ‘தேர்தலில் சீட் வாங்குவதில் போட்டிக்கு வந்துவிடுவேன் என நினைக்கிறாரா?’ என கேள்வி எழுப்பினார் அவர்.

கராத்தே தியாகராஜனுக்கு நடிகை குஷ்பூ பதிலடி கொடுத்தார். ‘தேர்தலில் சீட் வாங்குவதில் போட்டிக்கு வந்துவிடுவேன் என நினைக்கிறாரா?’ என கேள்வி எழுப்பினார் அவர்.

கராத்தே தியாகராஜனுக்கு நடிகை குஷ்பூ பதிலடி கொடுத்தார். ‘தேர்தலில் சீட் வாங்குவதில் போட்டிக்கு வந்துவிடுவேன் என நினைக்கிறாரா?’ என கேள்வி எழுப்பினார் அவர்.

கராத்தே தியாகராஜனுக்கு நடிகை குஷ்பூ பதிலடி கொடுத்தார். ‘தேர்தலில் சீட் வாங்குவதில் போட்டிக்கு வந்துவிடுவேன் என நினைக்கிறாரா?’ என கேள்வி எழுப்பினார் அவர்.

 

Tamilnadu Karate Thiyagarajan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment