மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்ணை தாக்கி பிரபலமான போலீஸ் அதிகாரிக்கு பதிவு உயர்வு அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றியவர், பாண்டியராஜன். பணியாற்றிய இடங்களில் எல்லாம் சர்ச்சைகுறியவராகவே இருந்துள்ளார். தென்காசியில் பணியாற்றிய போது ஐயப்ப பக்தர்கள் மீது லத்திசார்ஜ் நடத்தி சர்ச்சையில் சிக்கினார்.
திருப்பூரில் மதுக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்களை சரமாரியாக அடித்து அனைத்து கட்சி தலைவர்கள் கண்டனத்தையும் பெற்றவர்.
சமூக வலைதளங்களில் பாண்டியராஜனுக்கு எதிராக கடும் கண்டனங்கள் குவிந்தன. பலரும் பாண்டியராஜனின் அநாகரீக செயலை கடுமையாக கண்டித்தனர்.
அவரை உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும். பெண்ணை தாக்கியவர் காவல் துறையில் பணியாற்ற தகுதியற்றவர் என்ற அடிப்படையில் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வநதது. ஆனால் அவருக்கு தமிழக அரசு ஈரோடு மாவட்ட அதிரடிப்படை எஸ்.பியாக பதவி உயர்வு அளித்து கவுரவித்துள்ளது.