ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கலுக்கு இன்றே கடைசி நாள்! கடைசி நேரத்தில் களம் இறங்கிய ஸ்டார் வேட்பாளரான விஷால் வேட்புமனு தாக்கல் Live Updates
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, டிசம்பர் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல், நவம்பர் 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக வேட்பாளர் மருது கணேஷ், அதிமுக வேட்பாளர் மதுசூதனன், சுயேட்சையாக டிடிவி தினகரன் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் பலரும் மனு தாக்கல் செய்துவிட்டனர்.
ஆர்.கே.நகரில் வேட்பு மனுத் தாக்கலுக்கு இன்று (டிசம்பர் 4) கடைசி நாள். கடைசி நேரத்தில் தேர்தல் களத்தில் குதித்திருக்கும் விஷால் இன்று (டிசம்பர் 4) தனது வேட்புமனு தாக்கலுக்கு தேதி குறித்தார். இன்று காலை 9 மணிக்கு சென்னை ராமாவரத்தில் எம்.ஜி.ஆர். இல்லத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது, காலை 10 மணிக்கு சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி, பகல் 12.30 மணிக்கு ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வது என தனது நிகழ்ச்சி நிரலை முன்தினமே விஷால் வெளியிட்டார். கடைசி தினமான இன்று ஆர்.கே.நகர் வேட்புமனு தாக்கல் பற்றிய நிகழ்வுகள் இவை!
மாலை 4.30 : நடிகர் சேரன் விஷால் தேர்தலில் போட்டியிட கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ராஜினமா செய்யும் வரையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.
மாலை 4 : நடிகர் விஷால் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
பிற்பகல் 3 : 110 சுயேட்சைகள் மனுதாக்கல் செய்ய வந்திருப்பதால், வேட்பு மனுத்தாக்கல் செய்யும் நேரத்தை நீடித்திருப்பதாக, தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார். மாலை 3 மணிக்குள் வந்தவர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் டோக்கன் கொடுத்துள்ளனர். ஆர்.கே.நகரில் 140 பேர் வரை போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
பிற்பகல் 2.45 : ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மனுத்தாக்கல் செய்ய தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்துக்கு வந்துள்ளார்.

பகல் 2.15 : பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்பு மனுத்தாக்கல் செய்த பின்னர் தமிழிசை பேட்டியளித்தார். அப்போது, ’தேர்தலில் பணப்பட்டுவாடாவை தேர்தல் கமிஷன் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.
பகல் 2.10 : வேட்புமனுத்தாக்கல் செய்ய ஹெல்மெட் அணியாமல் விஷால் வந்ததாக சர்சை எழுந்துள்ளது.
பகல் 2.00 : முன் அனுமதி பெற்று வரும் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் சுயேட்சை வேட்பாளர்களிடம் சொல்லி சமாதானப்படுத்த முயன்று வருகின்றனர்.
பகல் 1.50 : தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் வந்து சேர்ந்தார், நடிகர் விஷால்.
காலை 1.45 : பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் மண்டல அலுவலகம் வந்தார். அவருடன் மாநில தலைவர் தமிழிசையும் வந்திருந்தார். அவரை சுயேட்சை வேட்பாளர்கள் அவரை சுற்றி வளைத்து, எங்களுக்குப் பின்னரே மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்றுக் கேட்டனர். இதையடுத்து போலீசார் சுயேட்சை வேட்பாளர்கள் அப்புறப்படுத்த முயன்றனர். உடன் மண்டல அலுவலகத்தில் போராட்டம் நடத்தினார்கள்.
காலை 12.30 : வேட்புமனுத்தாக்கல் செய்ய சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகமான தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் வந்து சேர்ந்தனர். ஆனால் 2 மணி நேரமாக மனுக்கள் பெறவில்லை. எனவே சுயேட்சை வேட்பாளர்கள் மனுவை பெறச் சொல்லி போராட்டம் நடத்தினார்கள்.
காலை 11.45 : திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கோட்டையில் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்தார். தொகுதி முழுவதும் உள்ள 90 தெருக்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று மனு கொடுத்தார்.
காலை 10.45 : சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் விஷால் அஞ்சலி செலுத்தினார். அங்கு நிருபர்களிடம் பேசிய விஷால், ‘ஆர்.கே.நகர் மக்களின் பிரதிநிதியாக இருக்க விரும்புகிறேன். நிச்சயம் பெரிய வெற்றியைப் பெறுவேன்’ என்றார் அவர்.
காலை 10.00 : சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லத்தில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார் விஷால்.
காலை 9.30: சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லத்திற்கு வந்த விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘நான் அரசியல்வாதியாக இந்தத் தேர்தலை அணுகவில்லை. மக்களில் ஒருவனாக தேர்தலில் நிற்கிறேன்’ என்றார்.
#Vishal Anna At #Kamarajar Ninaivillam ! @vishalkofficial @VffVishal pic.twitter.com/ToIq4OCbyC
— Vishal warriors (@Vishal_warriors) December 4, 2017
காலை 8.30 : காலை 8.30 மணிக்கு சென்னை தியாகராய நகரில் பெருந்தலைவர் காமராஜர் நினைவாலயம் வந்த விஷால், அங்கு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். முன் தினம் விஷால் வெளியிட்ட நிகழ்ச்சி நிரலில் காமராஜர் நினைவில்லம் இடம் பெறவில்லை.
ஊழலுக்கு எதிராக போரிடுவதாக கூறும் விஷால், சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபணமான ஜெயலலிதா நினைவிடம் செல்வது சர்ச்சை ஆனது. அதனால் கடைசி நேரத்தில் காமராஜர் நினைவாலயம் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டது.
#விஷால்_வேட்புமனு_தாக்கல்_நிகழ்ச்சி_நிரல்
???? காலை 8.30மணி தி நகர் காமராஜர் நினைவில்லம்
???? காலை 10 மணி ராமாவரம் எம்ஜிஆர் இல்லம்
???? காலை 11 மணி அண்ணா நினைவிடம்
???? 11.15 மணி ஜெயலலிதா நினைவிடம்
???? 12.30 மனு தாக்கல்.#WesupportVishal pic.twitter.com/dPSFH6WPx8— Vishal warriors (@Vishal_warriors) December 4, 2017