லாட்டரி விற்பனை அதிபர் மார்ட்டின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை கண்டித்து அவரது பணியாளர்கள் பெண்கள் உட்பட அவரது ஆதரவாதங்கள் கோஷங்களை எழுப்பினர்.
கோவை லாட்டரி விற்பனை அதிபர் மார்ட்டின் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் ஏந்த முகாந்திரம் இல்லாமல் தொடர் சோதனையை கண்டித்து அவர்களுக்கு ஆதரவாக வீட்டின் முன்பு அலுவலகத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் உறவினர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் இல்லத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த வருமானவரித்துறையினரின் சோதனை நடைபெற்று வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக வீட்டின் முன்பு அலுவலகத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் உறவினர்கள் வருமான வரி துறையினரை கண்டித்து கோஷங்கள் எழுப்பி நான்கு நாட்களுக்கும் மேலாக வருமான வரித்துறையினர் வீட்டிலும் தலைமை அலுவலகத்திலும் சோதனையில் எதுவும் கிடைக்க பெறாத தகவலின் அடிப்படையில் எந்த ஒரு முகாந்திரமும் இன்றி தொடர் சோதனையில் ஈடுபட்டு வருவது வன்மையான கண்டனங்களையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை லாட்டரி விற்பனை அதிபர் மார்ட்டின் வீட்டில் தொடர்ந்து ஐந்தாவது இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான்