தி.மு.க.வினர் சொத்து பட்டியலை தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.
இதற்குப் பதில் அளித்த மா.சுப்பிரமணியன், “அண்ணாமலை தொடர்ச்சியாக இதுபோன்று செய்துவருகிறார். ஒட்டுமொத்த துறையும் மத்திய அரசாங்கத்தின் கீழ்தான் உள்ளது.
தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்றார்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தி.மு.க. அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில், கே.என். நேரு, டி.ஆர். பாலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பல்வேறு நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
தொடர்ந்து மு.க. ஸ்டாலின் ரூ.200 கோடி லஞ்சம் பெற்றுள்ளார் என்ற குற்றச்சாட்டையும் அண்ணாமலை சுமத்தியுள்ளார். இதை நிரூபிக்க தவறினால் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும் என ஆர்.எஸ். பாரதி எச்சரித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“