சென்னை தினம் கொண்டாட்டம் – டுவிட்டரில் மலரும் நினைவுகள்

Happy Madras Day 2019: இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் மிகவும் இளம் வயது நகரம் சென்னை. இளம் வயது என்றால் 380 ஆண்டுகள்தான். ஆம். இந்த வாரம் சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.

madras day, madras day 2019, madras day 2019 date, madras day photos, madras week 2019, chennai day 2019, happy madras day 2019, மெட்ராஸ் டே, சென்னை தினம் 2019, madras day images, madras day 2019 quotes, madras day 2019 wishes
madras day, madras day 2019, madras day 2019 date, madras day photos, madras week 2019, chennai day 2019, happy madras day 2019, மெட்ராஸ் டே, சென்னை தினம் 2019, madras day images, madras day 2019 quotes, madras day 2019 wishes

Madras Day 2019 celebrations, Chennai Turns 380 Years Old: இந்தியாவில் உள்ள முக்கிய பெரிய நகரங்களில் மிகவும் இளம் வயது நகரம் சென்னைதான். இளம் வயது என்றால் 380 ஆண்டுகள். ஆம், இந்த வாரம் சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. சென்னை மாநகரம் உருவான 380வது ஆண்டு விழா சென்னை மக்களால் கொண்டாடப்பட்டுவருகிறது.

இன்றும் வட மாநிலத்தவர்கள் சென்னையில் வசிப்பவர்களை அதன் பழைய பெயரான மெட்ராஸ் என்பதைக் குறிப்பிடும் வகையில் மெட்ராசி என்றே குறிப்பிடுகின்றனர். அதற்கு காரணம் தமிழ்நாடு முதலில் மெட்ராஸ் மாகாணம் என்றே அழைக்கப்பட்டது.

அதன் தலைநகரான இன்றைய சென்னை ஆரம்ப காலத்தில் சென்னைப்பட்டினம் என்றும் மதராசப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. இன்றைய சென்னை மாநகரம் ஆகஸ்ட் 22, 1639 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

ஆந்திரா, கேரளா, தமிழகம் ஒன்றாக இருந்த போது தமிழகம் மெட்ராஸ் மாகாணம் என்றே அழைக்கப்பட்டது. அதன் பின்னர் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, ஆந்திரா, கேரளா தனி மாநிலங்களான பிறகும், தமிழகத்தின் தலைநகர் மெட்ராஸ் என்றே அழைக்கப்பட்டு வந்தது. 1967 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியில் மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஆனாலும், தமிழ்நாட்டின் தலைநகரான இன்றைய சென்னை மெட்ராஸ் என்றே அழைக்கப்பட்டு வந்தது. மெட்ராஸ் என்கிற பெயர் தமிழ் பெயராக இல்லை என்ற வாதம் எழுந்தபோது, நகரம் உருவான வரலாற்றுப் பின்னணியில் இருந்து 1996 ஆம் ஆண்டு மெட்ராஸ் என்ற பெயர் மாற்றப்பட்டு அதற்கு சென்னை என்று தமிழக அரசு பெயர் சூட்டியது.
அது முதல் சென்னை என்றே அழைக்கப்படுகிறது. ஆனாலும், சென்னை தினத்தை கொண்டாடும்போது அதன் பழைய பெயரில் அழைப்பதையே பலரும் பெருமையாக நினைக்கின்றனர்.

இந்தியாவின் கலாச்சார நகரம் என்றும் உலகிலேயே இரண்டாவது மிக நீளமான கடற்கரையைக் கொண்ட நகரம் என்ற பல பெருமைகளுக்கு சொந்தமானது சென்னை மாநகரம். அத்தகைய பெருமைமிகு சென்னையை கொண்டாடும் வகையில் 2004 ஆம் ஆண்டு முதல் மெட்ராஸ் தினம் என்றும் சென்னை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் ஒருவாரத்துக்கு கொண்டாடப்பட்டுவருகிறது. அதன் படி இந்த ஆண்டு சென்னை தினம் இன்று முதல் ஒருவாரத்துக்கு கொண்டாடப்படுகிறது. இந்த மெட்ராஸ் தினம் அல்லது சென்னை தினம் கொண்டாட்டத்தை முதலில் சென்னை ஹெரிடேஜ் பவுண்டேஷன் என்ற அமைப்புதான்

சென்னை தினத்தையொட்டி பலரும் சென்னை மாநகரத்தின் பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளனர். அவர்கள் எப்படியான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர் என்பதைப் பார்க்கலாம்.

வினோத் பழனிசாமி என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “வாழ்க்கையில் நம்பிக்கையற்ற பலருக்கு வேலை, வாழ்க்கை, புகழ், அடையாளம் கொடுத்த ஒரு நகரம். அந்த நகரம் 380 ஆண்டுகள் கடந்து வலிமையாக செல்கிறது. எங்கள் அற்புதமான நகரத்தை கொண்டாடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “இன்று மெட்ராஸ் தினம், நம்முடைய நகரத்துக்கு 380 வயதாகிறது. நாம் மெட்ராஸ் தினம் கொண்டாடலாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீசக்தி என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், பழைய சென்னை புகைப்படத்தை பதிவிட்டு ஹேப்பி மெட்ராஸ் டே என்று வாழ்த்து கூறியிருக்கிறார்.

380 ஆண்டுகள் பழமையான நகரம் பல நினைவுகளைக் கொண்டுவருகிறது. அது பல ஆண்டுகளாக எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தனது டுவிட்டர் பக்கத்தில் “மெட்ராஸ் தினத்தில் அனைத்து குடிமக்களுக்கும் வாழ்த்துகள். நம்முடைய புகழ்மிக்க நகரம் சென்னை. 380 வயதை அடைந்துள்ளது. இந்த நகரம் அதனுடைய, உயிர்ப்புள்ள கலாச்சாரம், ஆரோக்கியமான உணவு, செழுமையான பாரம்பரியம் ஆகியவற்றால் எப்போதும் என்னை கவர்ந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படி பலரும் பலவிதமாக சென்னை தினத்தைக் கொண்டாடி வருகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளரும் எம்.பி-யுமான ரவிக்குமார், தனது டுவிட்டர் பக்கத்தில், “நீங்கள் மெட்ராஸ் பற்றி பேசும்போது, 1773 ஆம் ஆண்டு மெட்ராஸ் வரைபடத்தை பாருங்கள். தலித் குடியிருப்பு பகுதி பறச்சேரி என்று நேர்த்தியாக குறிப்பிடப்பட்டிருகிறது. அதை யார் அகற்றியது? தலித்துகள் அங்கிருந்து எப்படி வெளியேற்றப்பட்டார்கள்? நீங்கள் மெட்ராஸ் தினம் கொண்டாண்டும்போது இந்த மண்ணின் மைந்தர்களைப் பற்றி யோசிப்பதற்கு ஒரு நிமிடமாவது செலவிடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படி சென்னை தினம், கலவையான நினைவுகளுடன், கொண்டாட்டங்களுடன், வாழ்த்துகளுடன் தொடங்கியுள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Madras day celebration remembering memories

Next Story
மதுரையில் பயங்கரம் : திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி படுகொலைmadurai, murder, dmk, raja, madurai police, pudur, real estate business
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com