சென்னையில் நீதிபதி மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அபிராமபுரத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு வசித்து வருகிறார். இவரது மகள் பெயர் கிரா. இவர் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கிராவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டுச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிரா ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்ற காரணங்கள் இதுவரை வெளிவரவில்லை. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“