scorecardresearch

மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க 246 மரங்கள் வெட்டப்பட்டதாக புகார்: பார்வையிட ஷெனாய் நகர் செல்லும் உயர்நீதிமன்ற நீதிபதி  

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியான தண்டபானி, ஷெனாய் நகரில் உள்ள திரு.வி.க. பூங்காவை பார்வையிட உள்ளார்.

மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க 246 மரங்கள் வெட்டப்பட்டதாக புகார்: பார்வையிட ஷெனாய் நகர் செல்லும் உயர்நீதிமன்ற நீதிபதி  

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியான தண்டபானி, ஷெனாய் நகரில் உள்ள திரு.வி.க. பூங்காவை பார்வையிட உள்ளார்.

உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கெ, பி சுப்பிரமணியம், ஷெனாய் நகரில் வசித்து வருகிறார்., இந்நிலையில் அப்பகுதியில் நடைபெற்று முடிந்த மெட்ரோ பணிகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை என்று புகார் கூறியிருக்கிறார். இதன் அடிப்படையில் உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபானி ஷெனாய் நகரில் உள்ள  திரு.வி.க பூங்காவை பார்வையிட உள்ளார்.

இந்த பூங்கா கிட்டதட்ட 8.8 ஏக்கர் பரப்பளவை கொண்டது. குறிப்பாக இங்கே 328 மரங்கள் இருந்தன. இந்நிலையில் சி.எம்.ஆர்.எல் சார்பாக 2011 முதல் சுரங்கப் பாதை ரயில் நிலையம் கட்டும் பணிகள் தொடங்கின. இந்த பணிக்காக 245 மரங்கள் வெட்டப்பட்டன. 56 மரங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன.

மெட்ரோ பணிகள் முடிந்த பிறகு இந்த பூங்கா பழைய நிலைக்கு திரும்பவேண்டும் என்ற கோரிக்கையோடுதான், ரயில் நிலையம் அமைக்க அனுமதி வழங்கியது பெருநகர் சென்னை மாநகராட்சி. ஆனால் மிக ஆழமான வேர்கள் உள்ள மரங்களை மீண்டும் வைக்க முடியாது. ரயில் நிலையத்தில் அப்படி செய்ய இடங்கள் இல்லை என்று சி.எம்.ஆர்.எல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மார்ச் 3ம் தேதி, முன்னாள் நிதிபதி சிவசுப்பிரமணியம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதில் சி.எம்.ஆர்.எல் தேவையின்றி பூங்காவின் அதிக இடங்களை எடுத்துள்ளது. மெட்ரோ ரயில் நிலையத்தில் நுழைவாயில் உருவாக்க குறைந்த இடமே போதும். ஆனால் மெட்ரோ அதிக இடத்தை எடுத்துள்ளது. மேலும் வேண்டும் என்றே மரங்களை விழ வைத்து, அதை அப்புறப்படுத்தி உள்ளனர் என்று கடிதத்தில் எழுதி உள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Madras high court judge to visit shenoy nagar park