எடப்பாடி பழனிசாமி - 4 அமைச்சர்களுக்கு நோட்டீஸ் : சசிகலாவிடம் ஆலோசனை பிரச்னையில் நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள சசிகலாவிடம் ஆலோசனை கேட்ட விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி, 4 அமைச்சர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ்

சிறையில் உள்ள சசிகலாவிடம் ஆலோசனை கேட்ட விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி, 4 அமைச்சர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தன. இதையடுத்து, சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதன்பின்னர் சசிகலா தரப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறையில் உள்ள சசிகலாவை, அமைச்சர்கள் சந்தித்துப் பேசி வந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனிடையே, சிறையில் உள்ள சசிகலாவிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் ஆலோசனை கேட்பது ரகசியக் காப்பு பிரமாணத்துக்கு எதிரானது. சிறையில் உள்ள சசிகலாவிடம் ஆலோசனை கேட்க இவர்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை, தாமரைக்கனியின் மகன் ஆணழகன், தொடர்ந்தார். மேலும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முதுலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், உள்ளிட்ட 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

×Close
×Close