வணக்கம் வந்தனம் சுஸ்வாகதம் நமஸ்கார்
ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கீங்க…நல்லாத்தான் இருப்பீங்கங்குற வாழ்த்தோட வாங்க நாம இன்னயோட நிகழ்ச்சிக்கு போவோம்..
பூ… இவ்வளவு தானா!’ என்று சர்வ சாதாரணமாக மதுரை மல்லியை சொல்லிவிட முடியாது. ஏனெனில் ஒரு மனிதனின் பிறப்பு, இறப்பு, வாழ்வு, காதல் என அனைத்து நிலைகளிலும் பூக்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. பூக்களின் நறுமணம், அவ்வப்போது நற்சிந்தனைகளை, நல்எண்ணங்களை எழுப்பும். எனவே பூக்களின் இடையே வாழ்தலே நன்று. கோயில் பூப்பிரசாதம் கையில் இருந்தால் தீய சக்திகள் ஒரு போதும் அண்டாது. இது காப்பு ரட்சையாயும் செயல்படும். மகான்கள் பூக்கள் மூலம் ஆசிர்வாதம் செய்வர். காரணம் அவர்களுடைய ஆசியை நேரடியாகப் பெறும் யோகசக்தி, மனப் பக்குவம் நமக்கு இல்லாததால் இடையில் புனித சக்தி நிறைந்த பூக்கள் பயனாகின்றது..
கொரோனா என்னும் கொடுங்கோலனிடமிருந்து தப்பிக்க வழிகோலும் இந்த வீடடங்கு நாட்களில் பெரும்பான்மை பெண்கள் வெளியே செல்வதில்லை. பூ வரத்தும் விற்பனையும் வீழ்ச்சி பெற்றுவிட்டது. விற்பனை பாதித்துள்ளதால் விவசாயிகள் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர். சில இடங்களில் டிராக்டரால் பூக்களை உழுது உரமாக்கி வருவதை அறிய வேதனையாக இருக்கிறது. கொரோனா பீதியில் யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்றே தெரிவதில்லை!
இதுவும் கடந்துபோகும்
கொரோனா பரவலையொட்டி, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில், ஒரு வார்டுக்கு ஒரு விநாயகர் சிலை மட்டும் நிறுவுமாறு மும்பை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.விநாயகரின் சிலைகள், 4 அடிக்குள் இருக்க வேண்டும். இந்த விநாயகர்களை விசர்ஜனம் செய்ய, செயற்கை நீர்நிலைகள் ஏற்படுத்தப்படும். அங்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். அங்கு மட்டுமே சிலைகளை விசர்ஜனம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வார்டுக்கு ஒரு கா(ர்டு)ட்…
சென்னை துரைப்பாக்கம், அடையாறு காவல் துணை ஆணையர் அறிவித்த, பிரத்யேக மொபைல் போன் எண்ணில், புகார் தெரிவித்த ஒரே நாளில், பாலியல் தொழிலை தடுத்ததால், துரைப்பாக்கம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சட்ட விரோத செயல்கள் நடந்தால், அது குறித்து நேரடியாக தெரிவிக்கலாம் என, அடையாறு காவல் துணை ஆணையர் விக்ரமன் அறிவித்தார். இதற்காக, பிரத்யேக மொபைல் போன் எண்ணும் அறிவித்திருந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹேட்ஸ் ஆப் ஆபிசர்.
கடலுார் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சுகளில், உயிரிழப்பை தடுக்கும் வகையில் ‘மல்டி பாரா மானிட்டர்’ பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரவேற்கத்தக்க முயற்சி
ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம். Bye..
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil