கோவிந்தா...கோவிந்தா... விண்ணை முட்டிய முழக்கம்!

கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வந்தால் விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம்.

சித்திரை திருவிழாவை முன்னிட்டு, முக்கிய நிகழ்வாக மதுரை வைகையாற்றில் அழகர் இன்று இறங்கினார். ஆற்றில் இறங்கிய அழகரை கைகளில் தீபம் ஏந்தி ஏராளமான பக்தர்கள் வரவேற்றனர். அப்போது பக்தர்கள் எழுப்பிய ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற கோஷத்தால் வான் அதிர்ந்தது.

இந்த காட்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையில் திரண்டிருந்தனர். ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து, பச்சை பட்டுடத்தில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவது ஸ்ரீராமானுஜர் காலத்தில் இருந்தே நடைபெற்று வருகிறது. கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வந்தால் விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம்.

இந்த திருவிழாவை முன்னிட்டு, பாதுகாப்பு பணிக்காக மதுரை மாநகா் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

×Close
×Close