மதுரையில் 10 ரூபாய்க்கு மதிய சாப்பாடு வழங்கி ஏழைகளின் பசி போக்கிய மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ராமு தாத்தா, தனது 91 வயதில் காலமானார்.
மதுரையில் ரூ.10-க்கு மதிய சாப்பாடு வழங்கிய ராமு உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள வில்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமு.
இவா் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியா் அலுவலகம் அருகே சிறிய உணவகம் நடத்தி வந்தாா். தொடக்கக் காலத்தில் கால் அணாவுக்கு மதிய உணவு வழங்கிய அவா், பின்னா் 1 ரூபாய், 2 ரூபாய் எனக் கடைசியாக ரூ.10-க்கு சாதம், பொறியல், ரசம், சாம்பாா், அப்பளம், மோா் ஆகியவை மதிய உணவாக வழங்கியுள்ளாா்.
ராமு குறைந்த விலையில் உணவு வழங்குவதைப் பாா்த்து பலரும் அவருக்கு நிதி உதவி செய்துள்ளனா். அவரது சேவையை பாராட்டி, பல்வேறு அமைப்புகள் விருதுகளும் வழங்கி உள்ளன.
ராமுவுக்கு அண்மையில் ஏற்பட்ட உடலநலக்குறைவால், உணவகத்தை நடத்த முடியாமல் போனது. இந்நிலையில், அவா் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இவரது உணவகம் கூலித் தொழிலாளா்களுக்கும், ஏழை மக்களுக்கும் வரப்பிரசாதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விவேக் இரங்கல்
மதுரை ராமு தாத்தா! உங்கள் உடல் மரிக்கலாம்; நீங்கள் போட்ட உணவு செரிக்கலாம்; ஆனால் உங்கள் நினைவு பசியாறியவர் நெஞ்சில் நீங்காமல் நிலைக்கும்!(17 வயதில் வடலூர் வள்ளலாரால் ஈர்க்கப்பட்டு இவ்வாறு வாழ்ந்திருக்கிறார்) pic.twitter.com/p8zI4nTti1
— Vivekh actor (@Actor_Vivek) July 12, 2020
நெட்டிசன்கள் இரங்கல்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அருகே 51 ஆண்டுகளாக சிறிய உணவகம் நடத்தி,குறைந்த விலையில் உணவு வழங்கி ஏழை எளியோர்களின் பசியாற்றி வந்த 91 வயது முதியவர் #ராமு_தாத்தா அவர்கள் காலமான செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் pic.twitter.com/mPhSQeHZC5
— கள்ளந்திரி அஜித் (@mINZvVayYBzP2x9) July 12, 2020
மதுரை: மதுரையில் 10 ரூபாய்க்கு மதிய சாப்பாடு வழங்கி ஏழைகளின் பசி போக்கிய மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ராமு தாத்தா 91 வயதில் காலமானார். காலணாவுக்கும் பிறகு ரூ.1- ரூ.5க்கும் சாப்பாடு வழங்கினார். சில ஆண்டுகளாக ரூ.10க்கு தரமான மதிய சாப்பாடு வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தார். pic.twitter.com/EIBtxDHY3S
— Nandakumar G (@vlringress) July 12, 2020
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மலிவுவிலை உணவு வழங்கிய ராமு தாத்தா மறைவு செய்தி கேட்டு துயறமுற்றேன் அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.https://t.co/ZaGSMQvJof pic.twitter.com/Lhk6Ae4eUN
— A K SAMY (@aksamydmk) July 12, 2020
10 ரூபாய்க்கு முழு சாப்பாடு’ மதுரை மக்களின் பசியாற்றிய ராமு தாத்தா காலமானார்
ஐயா உங்களின் சேவை போற்ற கூடியது….
இனி யார் செய்வார் இதைப்போல் ஒன்றை…???? pic.twitter.com/gI061eZrep— MohanaSundaram V (@MohanaS40705401) July 11, 2020
ராமு தாத்தா ????????…
மதுரை அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் 10 ரூபாய்க்கு சாப்பாடு கொடுத்து வந்த வள்ளலார் பக்தர் ஐயா ராமுத்தாத்தா இன்று நம்மை விட்டு பிரிந்தார்…
அள்ளி அள்ளி கொடுத்த அண்ணமிட்டகைகள் இன்று விடைபெற்றது…
ஆழ்ந்த இரங்கல் pic.twitter.com/IwW4OAmx6r— அஸ்வத்தாமன் சேரன் (@jairamguttuvan) July 11, 2020
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil