சாலை நடுவே சாக்கு மூட்டையில் கிடந்த ரூ.17.50 லட்சம்... நேர்மையுடன் பணத்தை ஒப்படைத்த பெண்; மதுரை போலீஸ் பாராட்டு

மதுரையில் சாலை நடுவே கிடந்த சாக்குமூட்டையில் ரூ.17.50 லட்சம் பணம் இருந்தது. அந்த பணத்தை நேர்மையுடன் காவல்துறைக்கு ஒப்படைத்த பெண்ணை போலீசார் பாராட்டினர்.

மதுரையில் சாலை நடுவே கிடந்த சாக்குமூட்டையில் ரூ.17.50 லட்சம் பணம் இருந்தது. அந்த பணத்தை நேர்மையுடன் காவல்துறைக்கு ஒப்படைத்த பெண்ணை போலீசார் பாராட்டினர்.

author-image
Martin Jeyaraj
New Update
Madurai woman handed over Rs 17.50 lakhs sack lying middle of the road to Police Tamil News

மதுரை வக்கில் புதுத்தெரு சந்திப்பு பகுதியில் சாலையின் நடுவே சாக்குமூட்டை ஒன்று கிடந்தது. அதை ஓரமாக தள்ள முயன்றபோது, அதில் 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது போல் தெரிந்தது.

மதுரையில் சாலை நடுவே கிடந்த சாக்குமூட்டையில் ரூ.17.50 லட்சம் பணம் இருந்தது. அந்த பணத்தை நேர்மையுடன் காவல்துறைக்கு ஒப்படைத்த பெண்ணை போலீசார் பாராட்டினர்.

Advertisment

மதுரை மாநகர் சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்த செல்வமாலினி என்ற சிவபக்தர், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் கோவிலில் இருந்து வீட்டிற்கு சென்றபோது, மதுரை வக்கில் புதுத்தெரு சந்திப்பு பகுதியில் சாலையின் நடுவே சாக்குமூட்டை ஒன்று கிடந்தது.

அதை ஓரமாக தள்ள முயன்றபோது, அதில் 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது போல் தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினருக்கு உடனே தகவல் தெரிவித்தார். பின்னர் சாக்குமூட்டை திறந்து பார்த்தபோது, ரூ.17 லட்சம் 50 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் கட்டுகட்டாக இருந்தன.

இதையடுத்து செல்வமாலினி, அந்த பணத்துடன் விளக்குத்தூண் காவல்நிலையத்திற்கு சென்று ஒப்படைத்தார். அவரது நேர்மைக்கு காவல்துறை பாராட்டு தெரிவித்தது. சாக்குமூட்டையில் இருந்த பணம் ஹவாலா வழியில் பரிமாறப்பட்டதா, அல்லது வியாபாரிகள் யாராவது தவறவிட்டதா என்பதை விளக்குத்தூண் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment
Advertisements
Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: