/tamil-ie/media/media_files/uploads/2018/02/a433.jpg)
நடிகர் கமல்ஹாசன், அரசியல்வாதி கமல்ஹாசனாக மாறியிருக்கும் தருணம் இது. ஆம்! மதுரையில் தற்போது நடைபெற்று வரும் மாபெரும் பொதுக் கூட்டத்தில், கமல்ஹாசன் தனது கட்சியின் கொடியை ஏற்றி, கட்சிப் பெயரையும் அறிவித்தார்.
'மக்கள் நீதி மய்யம்' என்று கட்சியின் பெயரை கமல்ஹாசன் அறிவித்த பிறகு, ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. முதலில் கொடியை ஏற்றிய கமல்ஹாசன், கொடிக்கு மரியாதை செலுத்திவிட்டு, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ஏறி, ரசிகர்கள் முன்னிலையில் கட்சிப் பெயரை அறிவித்தார்.
முன்னதாக, நடிகர் கமல்ஹாசன் தொடங்க இருக்கும் கட்சியின் பெயர் "திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்" என்று நேற்று வதந்திகள் பரவிய நிலையில், தற்போது கமல்ஹாசன் தனது கட்சியின் பெயரை 'மக்கள் நீதி மய்யம்' என்று அறிவித்துள்ளார்.
கமல்ஹாசன் முன்னதாக 'மய்யம்' என்ற பத்திரிக்கையையும் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் கனவு காண்கிறோம். ஒரு புதிய கட்சி, ஒரு புதிய பாதை, ஒரு புதிய கொள்கை. ‘மக்கள் நீதி மய்யம்’
தமிழகம் விழித்தெழட்டும்.#மய்யம்#மக்கள்_நீதி_மய்யம்
official website: https://t.co/cql8kgqGkk
twitter: https://t.co/J9ywXrunObpic.twitter.com/pmq5wTGbwL
— Kamal Haasan (@ikamalhaasan) 21 February 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.