/tamil-ie/media/media_files/uploads/2017/09/sreelekha_dgp_759.jpg)
ஆர் ஸ்ரீலேகா தான் கேரள மாநிலத்தில் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாவார். கடந்த 1987-ம் ஆண்டு முதல் ஐபிஎஸ் அதிகாரியான ஸ்ரீலேகா, அடுத்த மூன்று ஆண்டுகளில் கேரள மாநிலத்தில் முதல் பெண் எஸ்.பி-யானார். இந்த நிலையில், தற்போது கேரள மாநிலத்தின் முதல் பெண் டி.ஜி.பி- அந்தஸ்த்தை பெற்றுள்ளார் ஸ்ரீலேகா.
புதன் கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தாசான்கரி, அருண் குமார் சின்கா, சுரேஷ் குமார் மற்றும் கூடுதலாக 8 பேர் ஆகியோருக்கு டி.ஜி.பி அந்தஸ்த்துக்கு பதவி உயர்வு வழங்க முடிவுசெய்யப்பட்டது.
தற்போதைய நிலையில் ஸ்ரீலேகா, சிறைத்துறை ஏ.டி.ஜி.பி ஆக இருந்து வருகிறார். சிவில் தேர்வில் வெற்றி பெறுவதற்கு முன்னதாக கல்லூரி விரிவுரையாளராகவும், ரிசர்வ் வங்கியிலும் பணியாற்றியிருக்கிறார். 1886-ம் சிவில் தேர்வில் வெற்றிபெற்று கேரளத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையை தனதாக்கினார். சி.பி.ஐ-க்கு செல்வதற்கு முன்னதாக, திரிச்சூர், ஆழப்புளா, பதனம்திட்டா ஆகிய பகுதிகளில் மாவட்டத்தின் முதன்மை அதிகாரியாக (district chiefs)பணியாற்றியிருக்கிறார்.
சிபிஐ-யில் சோதனை டீமில் இருக்கும்போது, செல்வாக்கு மிகுந்த நபர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து அதிரடி காட்டியதனால் இவருக்கு “ரெய்டு ஸ்ரீலேகா” என்ற பெயரும் உண்டு. கடந்த 2005-ம் ஆண்டு, ஐ.ஜி-ஆக பணியாற்றி ஸ்ரீலேகா பின்னர், கேரள ரப்பர் மார்க்கெட்டிங் ஃபெடரேஷனுக்கு தலைமை பொறுப்பெற்று வழிநடத்தினார். 2013-ம் ஆண்டு விஜிலன்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் ஏ.டி.ஜி.பி-யாக பணியாற்றிய சமயத்தில், குடியரசுத் தலைவர் போலீஸ் மெடல் ஸ்ரீலேகாவிற்கு வழங்கப்பட்டது.
ஸ்ரீலேகா மலையாளத்தில் பல்வேறு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அவைகளில் 3 புத்தகங்கள் குற்றப் புலனாய்வு தொடர்பாக எழுதப்பட்டதாகும். டிரான்ஸ்போர்ட் கமிஷ்னராக பணியாற்றிய போது மாநிலத்தில் சாலை விபத்து ஏற்படுவதை குறைத்ததோடு, புதிய சாராம்சங்களையும் புகுத்தினார். ஸ்ரீலேகா ஸ்காட்லாந்து போலீஸில், ஸ்பெஷல் டிரைனிங்கும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.