தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் இல்லுப்பூர் தாலுகாவில் மெய்வழி சாலை என்கிற கிராமம் உள்ளது. இந்த மெய்வழி சாலையிலுள்ள மக்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமில்லை என்று திருத்தப்பட்ட வாகன மோட்டார் சட்டத்திலும் தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது.
மெய்வழி சாலை :
மெய்வழி சாலையில் மின்சாரம் கிடையாது, சிமன்ட் வீடுகள் கிடையாது. நவீன கால தொழில் நுட்பத்தை இன்னும் இந்த சாலைக்குள் அனுமதிக்க மெய்வழி சாலை மக்கள் மறுத்து வருகின்றனர். டிவி போன்ற விஷயங்கள் மதத் தூய்மையை மறைக்கின்றன என்பதே இவர்களின் கருத்து. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர குடியிருப்பாளர்கள் இருக்கும் இந்த கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் நடக்கும் மெய்வழி மத சிறப்பு விழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடி வருகின்றனர்.
யார் இவர்கள்?
முதலில், நாம் புரிந்து கொள்ள வேண்டியது, மெய்வழி என்பது ஒரு மதம். பூமியில் தோன்றிய அனைத்து மதங்களையும் மக்களிடையே கொண்டு சென்று, மதங்களின் மூலம் மனிதர்களை பலப்படுத்துவதே இவர்களின் அடிப்படை சித்தாந்தம்.
ஜமால் உசேன் ரவுத்தர் மற்றும் அவரது மனைவி பெரியா ஆகியோருக்கு பிறந்த காதர் பாட்ஷா இந்த மதத்தின் தொடங்கியவர் ஆவார். இந்த மதத்தில் எந்த மதத்தை சேர்ந்தவர்களும் உறுப்பினராக சேரலாம். நேரடியாகவே, மதக் குருமார்களிடம் இருந்து போதனை (உபதேசம்) பெற்றவர்களை ‘ஆண்டவர்கள்’ என்று அழைப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் குங்குமப்பூ சட்டையும், தலைப்பாகையும் அணிவார்கள். இவர்கள் தலைப்பாகையில் நிலா முத்திரையாக இருக்கும் கிழநாமம் மிகவும் பிரசத்தி பெற்றது.
உபதேசம் பெறாதவர்கள், வெள்ளை நிற தலைப்பாகையும்,குங்குமப்பூ அல்லாத மற்ற சடைகளையும் அணிவார்கள். மத குருமார்களால் உபதேசம் பெற்ற பெண்கள் தலையில் குங்குமப் பூ தாவணியையும், மற்ற பெண்கள் சேலையே தங்களது தாவணியாய்ப் பயன்படுத்துகிறார்கள் .
மெய்வழி மதம் எதில் மாறுபடுகிறது:
இன்றைய நவீன வாழ்கையில் மதம் ஒன்று அரசியலாக்கப்படுகிறது அல்லது மறைத்துவைக்கப் படுகிறது. “மதம் என்றால் சண்டை தான் அது வேண்டாம்” என்ற வார்த்தையை நாம் பல முறை கடந்து வந்திருப்போம்.
ஆனால், மெய்வழி மதம் சற்றே வித்தியாசமானது. உண்மையில், இந்த மெய்வழி மதங்களுக்கெல்லாம் மதங்களாகவே இருக்கின்றது. உன் மதம், என் மதம் என்று இங்கு எதுவும் கிடையாது. மனிதனை நெறிமுறைப்படுத்தும் தகுதி மதம் என்கிற நெறிமுறை அமைப்பால் தான் முடியும் என்பதை இவர்கள் நம்புகிறார்கள்.
இந்த மெய்வழி மதத்தில் மிகவும் குறிப்பிடப் பட வேண்டிய விஷயம் என்னவென்றால், “கல்யாணம் ஆகாமல் யாரும் அதன் உறுப்பினராக இருக்க முடியாது. இல்லற வாழ்க்கை வேண்டாம், இறை வாழ்க்கைக்கு வாருங்கள் என்று சொல்லும் மதங்களுக்கிடையே மெய்வழியின் தத்துவம் சற்றே வித்தியாசப் படுகிறதல்லவா?
இல்லற வாழ்க்கையும், இறை வாழ்கையும் ஒன்று தான். அன்றாட வாழ்கையின் சத்தங்களிலும் இறைவன் தென்படுகிறான் என்பது இவர்களது கருத்து.
தலைப்பாகை விளக்கு:
மெய்வழி சாலையில் அனைத்து ஆண்களும் தலைபாகை அணிவதால் வாகனங்களில் செல்லும் பொது இயல்பாய் ஹெல்மெட் அணிய முடியாது. இதனால், 2007 மோட்டார் வாகனச் சட்டத்திலுள்ள அதிகாரத்தை பயன் படுத்தி கட்டாய ஹெல்மெட்டில் இருந்து இவர்களுக்கு விளக்கு அளிக்கப்பட்டது. பெண்கள் வழக்கம் போல் ஹெல்மெட் அணிய வேண்டும்.
ஒரு மதத்தின் அடிப்படை சிறப்பம்சகங்களை நீக்கும் அளவிற்கு அரசு சட்டம் போடக் கூடாது என்பது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை வாதமாகும்.சீக்கியர்களை ஹெல்மெட் அணியக் கட்டாயப் படுத்தக் கூடாது என்பது இந்திய அரசியலமைப்பிலே எழுதப் பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில், திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்திலும் தற்போது தமிழக அரசு இந்த மெய்வழி மதத்தை பின் தொடரும் ஆண்களுக்கு ஹெல்மெட் அணிவது கட்டாயமில்லை என்று அறிவித்துள்ளது.