Hai guys....: இன்று ( டிசம்பர் 24) பெரியார், எம்ஜிஆர் நினைவுநாள்
MGR & Periyar death anniversary : டிசம்பர் 24, தந்தை பெரியார் மற்றும் முன்னாள் முதல்வர் எம் ஜி ராமச்சந்திரன், திரைப்பட நட்சத்திரங்கள் வி கே ராமசாமி மற்றும் பானுமதி ஆகியோரின் நினைவு நாள் ஆகும்.
தமிழ் பேசும் இனிய நல்உள்ளங்களுக்கு இனிய காலை வணக்கம்...
Advertisment
இன்னைக்கு டிசம்பர் 24. நாளைக்கு கிறிஸ்துமஸ் எல்லாரும் உற்சாகமா இருப்பீங்க. இன்னும் சில தினங்கள்ல புது வருசம் பொறக்கப்போகுது. வாங்க, நாம எல்லாரும் புது வருசத்தை (2020) உற்சாகமாக வரவேற்போம்.
உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??
டிசம்பர் 24, தந்தை பெரியார் மற்றும் முன்னாள் முதல்வர் எம் ஜி ராமச்சந்திரன், திரைப்பட நட்சத்திரங்கள் வி கே ராமசாமி மற்றும் பானுமதி ஆகியோரின் நினைவு நாள் ஆகும்.
தந்தை பெரியார் பற்றி தெரிஞ்சுக்குவோமா..
1879 இல் பிறந்த பெரியார், தமிழர்களின் அடையாளத்தையும் சுயமரியாதையையும் மீட்பதற்காக தொடங்கிய சுய மரியாதை இயக்கத்திற்காக நினைவுகூரப்படுகிறார். சராசரி தமிழரைப் பொறுத்தவரை, பெரியார் இன்று ஒரு சித்தாந்தம். அவர் சமூக சமத்துவம், சுய மரியாதை மற்றும் மொழியியல் பெருமை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தும் ஒரு அரசியலைக் குறிக்கிறார்.
அவர் வழிநடத்திய சுய மரியாதை இயக்கம் சடங்குகள் இல்லாத திருமணங்களை ஊக்குவித்தது. மேலும், பெண்களுக்கு சொத்துரிமை மற்றும் மணவிலக்கு பெறும் உரிமையை அனுமதித்தது. மக்கள் தங்கள் பெயர்களில் சாதி பின்னொட்டைக் கைவிட வேண்டும் என்றும், சாதியைக் குறிப்பிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். அவர் 1930-களில் மாநாட்டில் தலித்துகள் சமைத்த உணவை அனைவருக்கும் சமபந்திவைத்து பரிமாறினார். பல ஆண்டுகளாக, பெரியார் அரசியல் வேறுபாடு, சாதி, மதம் ஆகிய எல்லைகளைக் கடந்து நவீன தமிழ்நாட்டின் தந்தையாக தந்தை பெரியார் என்று போற்றப்படுகிறார்.
ok guys.... நாளைக்கு இன்னும் பல செய்திகளோட நாளைக்கு மீட் பண்ணுவோம் Bye....Have a nice day...