பால் கலப்படம் குறித்த ஆதாரத்தை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ராஜேந்திர பாலாஜி!

இந்த சோதனை முடிவுகள் குறித்து பால் நிறுவனங்கள் சார்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தனியார் நிறுவனங்களின் பால் கலப்படம் குறித்த ஆய்வ சோதனை முடிவுகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் பாலில் வேதிப்பொருட்கள் கலந்திருப்பதாகவும், உட்கொள்ள தகுதியானது அல்ல என தனியார் பால் நிறுவனங்கள் மீது கடந்த மே மாதம் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டி பேட்டியளித்தார்.

இதையடுத்து, ஹட்சன் ஆக்ரோ, டோட்லா, விஜய் ஆகிய பால் நிறுவனங்கள் சார்பில் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக சிவில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த மே மாதம் பல்வேறு நாட்களில் ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை தங்கள் நிறுவனங்களுக்கு எதிராக அமைச்சர் சுமத்தி உள்ளார்.

மேலும் எங்கள் நிறுவன பால் பொருள்களில் கலப்படம் உள்ளது என தெரிவித்துள்ளார். இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே தங்கள் நிறுவனங்கள் குறித்து பேச ராஜேந்திர பாலாஜி பேச தடை விதிக்க வேண்டும். மேலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டியால் தங்கள் நிறுவனத்துக்கும், நற்பெயருக்கும் கலங்கம் ஏற்பட்டது எனவே அதற்காக இழப்பை ஈடு செய்யும் வகையில் மூன்று நிறுவனங்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாயை மான நஷ்ட ஈடாக வழங்க ராஜேந்திர பாலாஜிக்கு உத்தரவிடவேண்டுமெனவும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த 10-ம் தேதி ( ஜூலை) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆதாரம் இல்லாமல் பேச அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தடை விதித்த நீதிபதி, இது தொடர்பாக பதில் அளிக்க உத்தரவிட்டார். 

இந்நிலையில் இந்த வழக்கில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சார்பில் கடந்த புதன் கிழமை பதில் மனு தாக்கல் செய்யபட்டது. அதில், உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் பால் கலப்படத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. நான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும், அமைச்சர் என்ற முறையில் பால் கலப்படம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெரிவித்தேன்.

நான் ஒரு பொது ஊழியர் என்ற முறையில் நான் எனது கடைமையை செய்துள்ளேன் இதற்கு சிவில் வழக்கு தொடரமுடியாது. மேலும் என்னை மிரட்டும் விதமாக இந்த வழக்கை தனியார் பால் நிறுவனங்கள் தெடர்ந்துள்ளன. மேலும் சிவில் வழக்கு தொடர்ந்த மூன்று நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருள்கள் தரம் குறைந்தவை தான்.

டோட்லா பால் நிறுவனத்தின் பாலில் ஹட்ரஜன்  கார்பனேட் வேதிப்பொருள் கலந்துள்ளது என்று தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. விஜய் டைரி நிறுவன பால் தரம் குறைந்தது. மேலும் எனது புகாருக்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளது.

எனது புகார் மூலம் சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர் ஆனால் இது குறித்து எந்த ஆதாரங்களை அந்த நிறுவனங்கள் தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கை தொடர்ந்ததன் மூலம் இந்த நிறுவனங்கள் தங்களின் தவறை மறைக்க நினைக்கின்றது. எனவே இந்த வழக்கை வழக்கு செலவுடன்  தள்ளுபடி செய்ய வேண்டும். வழக்கு செலவை தொகையை ஏதேனும் ஒரு அறக்கட்டளைக்கு அளிக்க வேண்டும் என அந்த பதில் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. 
அப்போது அப்போது அமைச்சர் ராஜேந்திரா பாலாஜி சார்பில்,  கடிதம் ஒன்று அளிக்கபட்டது . அதில் இந்த மூன்று நிறுவனங்களின் பால் மாதிரிகளை உத்திரபிரதேசத்தில் காசியாபாததில் உள்ள  ரெப்ரல் ஃபுட் டெக்னாலஜியில் ஆய்வகத்தில் சோதனைக்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து வந்த சோதனை முடிவுகளின்படிதான் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கப்பட்டது என இந்த நிறுவனங்களின் பால் சோதனை முடிவுகள் விபரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஜூலை 18 முதல் 26 வரை நடைபெற்ற இந்த சோதனைகயில் இந்த மூன்று நிறுவனங்களின் பால்  தரமற்றவை என்று அந்த முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. 

இந்த சோதனை முடிவுகள் குறித்து பால் நிறுவனங்கள் சார்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close