பாலில் ரசாயனம்: துணிச்சலான நடவடிக்கை இல்லையெனில் பதவி விலக வேண்டும்: பொன்.ராதா பாய்ச்சல்

நடிவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை என்றால் இது போன்று பேசக்கூடாது

பால் மற்றும் பால்பொருட்களில் ரசாயனத்தை கலப்படம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

தனியார் பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் இருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னதாக கூறியிருந்தார். இதற்கு தனியார் பால் முகர்வகள் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆய்வறிக்கையுடன் வந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பால் மற்றும் பாலில் கலப்படம் செய்த நிறுவனங்கள் குறித்து தெரிவித்தார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது: தயவு செய்து பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை என்றால் இது போன்று பேசக்கூடாது.

எதுஎதற்கோ ராஜினாமா செய்வேன் என்று கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் உடனடியாக துணிச்சலுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் பதவி விலக வேண்டும் என்று கூறினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close