தமிழக அரசு இணையதளத்தில் புதிதாக இடம்பெற்றுள்ள தமிழ் ஆட்சி மொழி அமைச்சரின் பெயரில் பிழை இருப்பது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
அதிமுக அணிகள் இணைப்பைத் தொடர்ந்து, தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த நிலையில், அதிமுக பிளவின் போது அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட மாஃபா பாண்டியராஜனுக்கு, மீண்டும் அமைச்சரவையில் இடம் கிடைத்தது.
அதிமுக அணிகள் இணைப்பை தொடர்ந்து துணை முதலமைச்சராக ஓ பன்னீர் செல்வமும், தமிழ் ஆட்சி மொழி, பண்பாட்டுத்துறை அமைச்சராக மாஃபா பாண்டியராஜனும் திங்கள்கிழமை பொறுப்பேற்றனர்.
இதையடுத்து, அரசு இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள, மாஃபா பாண்டியராஜனின் பெயர் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் ஆட்சி மொழி துறை அமைச்சரின் பெயரிலே பிழையுடன் அரசு இணையதளத்தில் இடம்பெற்றிருப்பது, விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது.
பாண்டியராஜன் என்பதற்கு பதிலாக பாண்டியாராஜன் என தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. சில சயங்களில் தவறுகள் ஏற்படத் தான் செய்யும் என்றபோதிலும், தமிழ் ஆட்சி மொழி துறை அமைச்சரின் பெயரிலே(தமிழில்) பிழை உள்ளது தான் விமர்சனத்திற்குள்ளாவதற்கான முக்கிய காரணமாகும்.