Advertisment

சென்னையில் ஜவுளித் துறை தொழில்நுட்ப மாநாடு: சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்க இருப்பதாக அமைச்சர் தகவல்

இந்தியாவில் தற்போது ஜவுளி துறையில் குஜராத்திற்கு அடுத்ததாக இரண்டாவது நிலையில் தமிழகம் உள்ளது தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சென்னையில் ஜவுளித் துறை தொழில்நுட்ப மாநாடு: சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்க இருப்பதாக அமைச்சர் தகவல்

பல்வேறு ஜவுளி மற்றும் பின்னலாடை அமைப்புகள் சார்பில் கோவை தென்னிந்திய பின்னலாடை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், '60வது ஜவுளி தொழில்நுட்ப கருத்தரங்கு' இன்று நடைபெற்றது.

Advertisment

இந்நிகழ்வில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இக்கருத்தரங்கில், ஜவுளி மற்றும் பின்னலாடைத் துறையின் வளர்ச்சி குறித்த அம்சங்கள் தொழில்துறையினரால் எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், சிறப்புரையாற்றிய அமைச்சர், தொழில்நுட்பம் சார்ந்த ஜவுளி உற்பத்திக்கான தேவை அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக மருத்துவம் மற்றும் பாதுகாப்பு துறையில் தொழில்நுட்ப ஜவுளி குறித்த ஆராய்ச்சி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஜவுளி துறையில் அதிக அளவு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் கூறினார்.

publive-image

மேலும், சென்னையில் நடைபெற உள்ள ஜவுளித்துறை தொழில்நுட்ப மாநாட்டிற்கு சர்வதேச அளவிலான நிறுவனங்களை அழைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது:

தமிழக முதல்வர் ஆட்சிக்கு வந்த ஒன்றரை வருடங்களில் ஜவுளித்துறை வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

publive-image

அந்த நடவடிக்கைகள் குறித்து பின்னலாடை உற்பத்தியாளர்களிடம் கேட்டால் அவர்களே கூறுவார்கள்.

ஆட்சி பொறுப்பேற்ற பின் பின்னலாடை நிறுவனத்தாரிடம் அவர்களது குறைகள் கேட்டறியப்பட்டது. பிரதான குறையாக செஸ் வரியை முன் வைத்தனர். அடுத்த இரண்டு மாதங்களில் அது ரத்து செய்யப்பட்டது.

ஜவுளி, நெசவு மற்றும் கூட்டுறவுக்கென ஒரே ஆணையர் இருந்த நிலையில் ஜவுளித்துறைக்கென என முதல்முறையாக தனி ஆணையர் நியமிக்கப்பட்டு ஜவுளித்துறை அமைப்புகளுடன் ஆலோசனை செய்யப்பட்டு அத்துறை மேம்படுத்தப்பட்டு வருகிறது.

2016 ஆம் ஆண்டு முந்தைய ஆட்சியில் மினி டெக்ஸ்டைல் எனும் திட்டம் கொண்டுவரப்பட்டது. சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் சிறிய மில் யூனிட்டுகள் அமைப்பதற்கான திட்டம் அது. 2.5 கோடி வரை அரசு மானியம் வழங்குவதாக அறிவித்தது. ஆனால் அந்த மானிய தொகையை சாலை அமைப்பதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டதால் இத்திட்டத்திற்கு பெருமளவு வரவேற்பு இல்லை.

ஆறு மாதங்களுக்கு முன்பு இத்திட்டம் குறித்து நாங்கள் விசாரணை நடத்தி ஆய்வு செய்ததில், மானிய தொகையை கட்டடங்கள் கட்டவும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் திட்டத்தில் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் தற்போது 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளனர். அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு விண்ணப்பதாரர்கள் குறித்து ஆய்வு செய்து திட்டம் அமல்படுத்தப்படும்.

மேலும், தமிழக முதல்வர் சேலத்தில் டெக்ஸ்டைல் பூங்கா அறிவித்து 150 ஏக்கர் பரப்பளவில் சுமார் 500 கோடி மதிப்பிலான திட்டம் தயாராகி வருகிறது.

இந்தியாவில் தற்போது ஜவுளி துறையில் குஜராத்திற்கு அடுத்ததாக இரண்டாவது நிலையில் தமிழகம் உள்ளது. ஜவுளித்துறை மட்டுமின்றி அனைத்து துறை மேம்பாட்டிற்காகவும் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஜவுளி உற்பத்திக்கு அரசு உறுதுணையாக இருக்கும்.

ஜவுளி பயன்பாட்டிற்கான பருத்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பருத்திக்கான 11 சதவீத இறக்குமதி வரி தமிழக அரசின் வலியுறுத்தலின்படி நவம்பர் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதை நிரந்தரமாக நீக்க மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம். யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அதை செய்வதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

இதற்காக மத்திய ஜவுளித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளோம்.

அனைத்து துறைகளையும் மேம்படுத்தி தமிழ்நாட்டை முன்மாதிரி மாநிலமாக கொண்டு செல்ல தமிழக முதல்வர் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதை அமைச்சர்கள் நாங்கள் அமல்படுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Gujarat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment