தமிழகத்தை சூறையாடியவர்கள் விமர்சனம் பற்றி கவலையில்லை : டிடிவி-க்கு ஜெயக்குமார் பதிலடி

தமிழகத்தை சூரையாடியவர்கள் எங்களை தரங்கெட்ட முறையில் விமர்சிக்கிறார்கள். நாட்டு மக்களுக்கு யார் பஃபூன் என்று தெரியும் என ஜெயக்குமார் காட்டம் தெரிவித்தார்.

தமிழகத்தை சூரையாடியவர்கள் எங்களை தரங்கெட்ட முறையில் விமர்சிக்கிறார்கள். நாட்டு மக்களுக்கு யார் பஃபூன் என்று தெரியும் என ஜெயக்குமார் காட்டம் தெரிவித்தார்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழகத்தை சூறையாடியவர்கள் விமர்சனம் பற்றி கவலையில்லை : டிடிவி-க்கு ஜெயக்குமார் பதிலடி

தமிழகத்தை சூரையாடியவர்கள் எங்களை தரங்கெட்ட முறையில் விமர்சிக்கிறார்கள் என டிடிவி தினகரனின் பஃபூன் விமர்சனத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisment

டிடிவி தினகரனை ஓரங்கட்டி விட்டு அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தன. ஆனால் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏ-க்கள் 19 பேர் முதல்வர் பழனிசாமி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர். இதனால், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தினகரனை ஓரம் கட்டியதில் இருந்து அவரது ஆதரவாளர்களுக்கு இபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே வார்த்தை போர் முற்றியுள்ளது. இரு தரப்பினரும் விமர்சனக் கணைகளை தொடுத்து வருகின்றனர். அந்த வகையில், நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், முதல்வரை மாற்ற வேண்டும் என்பது தான் எங்களின் கோரிக்கை. அமைச்சர் ஜெயகுமார் பஃபூன் போல ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார் என்றார்.

இந்நிலையில், செய்தியாளர்களை இன்று சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தை சூரையாடியவர்கள் எங்களை தரங்கெட்ட முறையில் விமர்சிக்கிறார்கள். என் கேள்விக்கு பதிலளிக்க துணிவில்லாதவர்கள் என்னை கீழ்தரமாக விமர்சிக்கிறார்கள். மக்களால், அதிமுக தொண்டர்களால் வெறுக்கப்படுபவர்களின் விமர்சனம் குறித்து எனக்கு கவலையில்லை. நாட்டு மக்களுக்கு யார் பஃபூன் என்று தெரியும் என்றார் காட்டமாக.

Advertisment
Advertisements

மேலும், ஜக்கையனைப் போல தினகரன் அணியிலுள்ள ஒவ்வொரு எம்எல்ஏ-க்களாக எங்கள் அணிக்கு வருவார்கள். கட்சி விதியின்படி 5-ல் ஒரு பகுதி உறுப்பினர்களின் ஆதரவுடன் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். திட்டமிட்டபடி 12-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Ttv Dhinakaran

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: