Advertisment

துரோகிகள் என்ற பட்டத்தை சுமக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்: டிடிவி தினகரனை விமர்சித்த ஜெயக்குமார்

டிடிவி தினகரன் தொடர்புடைய குடும்பத்தின் தலையீடே இல்லாமல் வழிநடத்துகின்றோம் என்று சொல்லி தான் கட்சியும் ஆட்சியும் வழிநடத்தப்படுகிறது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
aiadmk, aiadmk head office, rk nagar, E.Madhusudhanan, cm edappadi palaniswami, deputy cm o.panneerselvam, minister jeyakumar

tamilnadu news today live updates

ஜெயலலிதாவின் ஆட்சியை தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஆட்சியை வழிநடத்திக் கொண்டிருக்கின்றோம்.இந்த ஆட்சி தொடரக் கூடாது என்று நினைத்தால், அது ஜெயலலிதாவிற்கு செய்யும் துரோகம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த

Advertisment

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக அணிகள் இணைப்பு எப்போது நடக்கும்?

அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே எனது விருப்பம். எங்களுடைய அருமை சகோதரர்களுக்குள்ளாக சின்னச் சின்ன இடர்பாடுகள் தான். அனைவரும் ஓரே குடும்பம் தான், அதில் சின்னச்சின்ன பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். எனவே, அந்த சின்னச்சின்ன பிரச்சனைகளை பெரிதாக்காமல், இணைய வாருங்கள் என அழைத்து வந்தோம். அதற்கு தீர்வு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். அந்த வகையில் தான் டெல்லியில் பிரதமரை சந்தித்த ஓ பன்னீர் செல்வம், ஒரு பாசிடிவ் சிக்னல் கொடுத்திருக்கிறார். அதனால், விரைவில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அணிகள் இணைப்பு தொடர்பாக பிரதமரிடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியிருப்பாரா?

பிரதமரை சந்தித்துவிட்டு ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஓபிஎஸ் கூறியதை பார்க்கும்போது, அவர் அணிகள் இணைப்பு குறித்து பிரதமரிடம் பேசப்பட்டதாக தான் எடுத்துக் கொள்ள முடியும்.

அதிமுக அணிகள் இணைவதில் பாஜக-விற்கு ஏன் ஆர்வம் இருக்க வேண்டும்?

ஜெயலலிதாவால், கட்டுக்கோப்பாக இருந்த இயகம் ஒன்றுபட வேண்டும் என்ற பொதுநோக்கத்தில் கருத்து சொல்லவதாக எடுத்துக் கொள்ளலாம். இரு அணிகள் இணைவதற்கு நீங்கள் கூட முயற்சி எடுக்கலாம். அதில் தவறேதுமில்லை.

இரு அணிகள் இணைவதற்கு பாஜக பாலமாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?

அது பாலம் கிடையாது, ஆறு கிடையாது, கடல் என எதுவும் கிடையாது. பத்திரிக்கைகள் கூட அந்த முயற்சியை எடுத்துக்கொள்ளலாம். இந்த சந்திப்பை ஊக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, எந்தவித உள்நோக்கத்திலும் பார்க்கக்கூடாது என்பது கருத்து.

ஆட்சியாளர்களுக்கு கட்சி மீதும் ஆட்சி மீதும் கவலையில்லை என்றும், கிடைப்பதை சுருட்டிக் கொண்டு போவது என்பது தான் அவர்களின் நினைப்பாக இருக்கிறது என்று டிடிவி தினகரன் கூறியிருக்கிறாரே?

எந்த வகையிலும் டிடிவி தினகரன் நிதானத்தை இழந்திருக்கூடாது. அவ்வாறு அவர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. கவலை தரக்கூடிய, வேதனை தரக்கூடிய கருத்தாகும்.

திமுக சொல்வது என்பது கட்சிக்கு சம்பந்தமில்லாதது. ஆனால், அதிமுக-வில் இருந்து எல்லா நலன்களையும் அனுபதிவித்துவிட்டு, மற்றவர்களின் மீது சேற்றைவாரி வீசுவது என்பது அவர்கள் மீது அவர்களாகவே சேற்றை வாரி வீசியதாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும்.

அதில் எந்தவித உண்மையுமில்லை என்பதோடு, பக்குவமில்லாமல் அவர் பேசியிருக்கிறார். ஜெயலலிதா இருந்தபோது அனைத்து பலன்களையும் அனுபவித்துவிட்டு இவ்வாறு அவர்கள் பேசுவது வேடிக்கை, விநோதம், சுவாஸ்யமாக இருக்கிறது.

டிடிவி தினகரன் நடத்தக்கூடிய கூட்டத்திற்கு தோழமை கட்சிகளான கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளது குறித்து?

எங்களைப் பொறுத்தவரை, மேலூரில் நடத்தப்படும் அந்த கூட்டத்தில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொள்ளவில்லை. ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என்றே அனைவரும் விரும்பும் நிலையில், அந்த 3 பேரும் எந்த நிலையில் அவ்வாறு தெரிவித்தனர் என்பது தெரியவில்லை. ஆனால், அவர்கள் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தான் தொடர வேண்டும் என நினைக்கின்றனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

டிடிவி தினகரனுக்கு எதிரான தீர்மானத்தில் 27 பேர் கையெழுத்திட்ட நிலையில், விவசாய பிரிவி தலைவர் துரை கோவிந்தராஜன் தெரியாமல் கையெழுத்திட்டதாக தெரிவித்துள்ளார். அது குறித்து?

அன்று நான் அவர்களுடன் தான் இருந்தேன். தீர்மானங்கள் படித்து முடித்த பின்னர் தான் அவர் கையெழுத்திட்டார். ஆனால், அவர் தற்போது மாறுபட்ட கருத்தை தெரிவிக்கிறார். அவர் மிரட்டப்பட்டாரா என்று யோசிக்க வேண்டும். குழந்தை இது போன்ற வார்த்தை சொல்லலாம் ஆனால், மேஜர் அவர், இவ்வாறு சொல்லக்கூடாது. இது குறித்து அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்.

டிடிவி தினகரனுக்கு எதிராக பேசும்போது, சசிகலா குறித்து பேச மறுப்பது ஏன்?

தொடர்சியாக சொல்லிவருவது என்னவென்றால், டிடிவி தினகரன் தொடர்புடைய குடுபத்தின் தலையீடே இல்லாமல் வழிநடத்துகின்றோம் என்று சொல்லி தான் கட்சியும் ஆட்சியும் வழிநடத்தப்படுகிறது.

ரம்ஜான் விழாவில் அந்த குடும்பத்தினரை அழைத்தோமா? குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு தெரிவிக்கும் போது அவர்களின் நிலைப்பாட்டை கேட்டோமா? நாங்கள் கூறியது படி தெளிவாக இருக்கிறோம். நீதிமன்றத்திலும் , தேர்தல் ஆணையத்திலும் பொதுச்செயலாளர் யார் என்பது குறித்து இன்னும் முடிவு வரவில்லை என்ற நிலையில், அது தொடர்பாக கருத்து கூறமுடியாது.

ஓபிஎஸ் தரப்பில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன் குடும்பதினரை நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணத்தில் விசாரணை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. டிடிவி தினகரன் குடும்பத்தை நீக்கியுள்ள நிலையில், ஜெயலலிதா மரணத்தில் விசாரணை நடத்தப்போவது எப்போது?

அவருக்கே இது குறித்து தெரியும். நீதிமன்றத்தில் இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. எனவே, அது குறித்து பேச கூடாது. நீதிமன்றத்தின் உத்தரவின்படி, நடவடிக்கை எடுக்கப்படும்.

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். அவர்களை உங்களுடன் சேர்ப்பதற்கு என்ன நடவடிக்கை?

ஜெயலலிதாவின் ஆட்சியை தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஆட்சியை வழிநடத்திக் கொண்டிருக்கின்றோம். ஆனால், இதில் மாறுபட்ட கருத்தாக, இந்த ஆட்சி தொடரக் கூடாது என்று நினைத்தால், அது ஜெயலலிதாவிற்கு அவர்கள் செய்யும் துரோகம். அவர்கள் துரோகிகள் என்ற பட்டத்தை சுமக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தமிழ்நாட்டு மக்களும் இதனை ஏற்க மாட்டார்கள். ஆட்சி யார் நடத்த வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று சொல்கிறார். அப்போது, ஜெயலலிதாவின் விசுவசத்தோடு டிடிவி தினகரன் இருந்திருந்தார் என்ன செய்திருக்க வேண்டும்...

எங்களுக்குள்ளான சண்டையில், நாங்கள் பின்னால் இருந்து கூட ஜெயலலிதாவின் ஆட்சி நல்ல முறையில் செயல்படுகிறது என நினைத்து ஆதரவு தெரிவித்தால் மக்கள் பாராட்டுவார்கள். ஆனால், அதற்கு மாறாக ஆட்சியைக் கவிழ்க வேண்டும் என நினைக்கிறன்ற திமுக, ஒரு தீர்மானம் கொண்டுவரும்போது,  தேவைப்பட்டால் அதற்கு ஆதரவு தருவது குறித்து யோசனைசெய்வோம் என்று டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். இதனை மாபெரும் துரோகக் கருத்தாக தான் எடுத்துக் கொள்ள முடியும்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்கு நாங்கள் தான் தகுதியானவர்கள். டிடிவி தினகரன் காழ்ப்புணர்சி காரணமாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்துகிறார். அதனை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஜெயலலிதா இருந்த இடத்தில் யாரையும் வைத்து அழகு பார்க்க விரும்பவில்லை. இதைவிட அழகாக யாரும் கூறமுடியாது.  அதிமுக கட்சி விதிகளின்படி டிடிவி தினகரன் நியமனம் செய்யப்பட்டதும் செல்லாது. அவரால் நியமிக்கப்பட்டதும் செல்லாது.

முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்துகள் பரப்பினால் நடவடிக்கை எடுப்பீர்களா?

“ஆத்திரக்காரணுக்கு புத்தி மட்டு” என்பார்கள். என்ன பேசுகிறோம் என்று புரிந்து கொண்டு பேச வேண்டும். எனவே, தரக்குறைவாக பேசுவது கூடாது. எதிலும் நிதானம் தேவை.

420 என்று முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை டிடிவி தினகரன் விமர்சித்திருக்கிறார். அவர் மீது அரசு வழக்கு தொடுக்குமா?

முதலமைச்சர் குறித்து அவர் தரக்குறைவாக விமர்சித்தால் மக்கள் அதனை உணர்வார்கள். அதேபோன்று கட்சிக்காரர்களும் அதனை உணர்வாகர்கள். எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் பெருந்தன்மையுடன் இருக்கிறோம் என்று கூறினார்.

Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment