ஹைட்ரோ கார்பன் திட்டம் : ஆய்வு செய்ய மட்டுமே மத்திய அமைச்சகம் அனுமதி அளித்திருக்கிறது - மாஃபா பாண்டியராஜன்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேண்டும் என்றால் மாநில அரசிடம் முறையாக அனுமதி பெற வேண்டும்

ஹைட்ரோ கார்பன் திட்டம் மாஃபா பாண்டியராஜன் கருத்து : பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் நேற்று இந்தியாவில் 55 இடங்களில் இயற்கை எரிவாயு எனப்படும் ஹைட்ரோ கார்பனை எடுக்க ஒப்ந்தம் கையெழுத்தானது. தமிழகத்தில் சிதம்பரத்தில் ஒரு இடத்திலும், காவிரி டெல்டா பகுதியில் இரண்டு இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்புதல் வழங்கியிருக்கிறது மத்திய அரசு.

இதனை எதிர்த்து பல்வேறு அமைப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்து வருகிறார்கள். மேலும் படிக்க : காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க “ஸ்டெர்லைட் வேதாந்தா” குழுமத்திற்கு ஒப்புதல்

ஹைட்ரோ கார்பன் திட்டம் மாஃபா பாண்டியராஜன் கருத்து

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து இன்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் “ஹைட்ரோ கார்பன் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.  மேலும்  “தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேண்டும் என்றால் மாநில அரசிடம் முறையாக அனுமதி பெற வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்திரிக்கையாளார்கள் சந்திப்பில் மேலும் அவர் “எய்ம்ஸ் மருத்துவமனை குறித்தும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்தும், ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்தும்” பேசியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close