scorecardresearch

பாஜக அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்: ’யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்போம்’: மனோ தங்கராஜ்

நாகர்கோவிலில் பாஜக அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போரட்டத்தில் ஈடுபட்டது தவறு என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

Minister Mano Thangaraj inspects Ambattur Dairy Farm
அமைச்சர் மனோ தங்கராஜ்

நாகர்கோவிலில் பாஜக அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போரட்டத்தில் ஈடுபட்டது தவறு என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் பாஜக அலுவலகம் முன்பு, காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இது தொடர்பாக பேச்சிப்பாறையில் செய்தியாளரக்ளை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், “ எல்லா இடங்களிலும் போரட்டம் நடக்கத்தான் செய்கிறது. ஆனால் இங்கே ஒரு சின்ன தவறு நடந்திருக்கிறது. இந்த போரட்டம் நடைபெற முறையாக அனுமதி பெறவில்லை. அதனால் இந்த போரட்டத்தை கட்டுப்படுத்த அரசிக்கும் காவல்துறைக்கும் பொறுப்பு இருக்கிறது. சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. இங்கே சிலர் சட்டத்தை கையில் எடுக்க முயற்சிக்கிறார்கள். தவறு செய்தவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஜனநாயக நாடு” என்று அவர் தெரிவித்துள்ளார்.  

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Minister mano thangaraj says the protest of congress party members against the law