Advertisment

கொடநாடு வழக்கில் உயர் பதவியில் இருந்தாலும் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது - அமைச்சர் ரகுபதி

“கொடநாடு வழக்கில் உயர் பதவியில் இருந்தாலும் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Minister Raghupathy, கொடநாடு வழக்கில் உயர் பதவியில் இருந்தாலும் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது, கொடநாடு வழக்கு, அமைச்சர் ரகுபதி உறுதி, Minister Raghupathy says In Kodanadu case, criminals cannot escape even if they are in high positions, dmk, aiadmk,

அமைச்சர் ரகுபதி

“கொடநாடு வழக்கில் உயர் பதவியில் இருந்தாலும் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

Advertisment

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை தண்டிக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தி ஆகஸ்ட் 1-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கலந்துகொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புதுக்கோட்டையில் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசியதாவது: “கோடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். எந்த உயர் பதவியில் இருந்தவர்களாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

மேலும், “மேகதாது அணை விவகாரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பார். தமிழக அரசின் நிலைப்பாடு மேகதாது அணை அமைக்கக்கூடாது” என்று சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி, “கோடநாடு விவகாரத்தில் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நடந்தது என்ன என்பதை தெளிவுபடுத்துவோம் என்று திமுக தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியதை செய்கிறபோது, கோபப்படுவதில் நியாயம் இல்லை. இது, பழிவாங்கும் போக்கு என்று கூறுவது ஏற்புடையதல்ல என்றார். யாரையும் அச்சுறுத்துவதற்கோ, மிரட்டுவதற்கோ கோடநாடு வழக்கை ஆயுதமாக பயன்படுத்தவில்லை.” என்று கூறினார்.

மேலும், அம்பேத்கர் படம் தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் தலைமை நீதிபதியை சந்தித்து கலந்து ஆலோசித்தேன். அம்பேத்கர் படம் உள்ளிட்ட எந்த புகைப்படங்களையும் நீதிமன்றங்களில் இருந்து அகற்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இது தொடர்பாக முதல்வருக்கு எடுத்து சொல்லி விடுங்கள் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்” என்று அமைசர் ரகுபதி கூறினார்.

விலைவாசி உயர்வு குறித்து பேசிய அமைச்சர் ரகுபதி, “ஒரு ஆண்டில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் விலைவாசி உயர்வு என்பது வாடிக்கையானது. விலைவாசி உயராத அளவு தமிழக அரசு கட்டுக்குள் வைத்திருக்கிறது. ஒரு சிலர் காய்கறிகளை பதுக்குவதாக தகவல் கிடைக்கிறது. அது சரி செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment